தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு.. என்ன தான் காரணம்? சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மாலையிலிருந்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் வந்த நிலையில் மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரம் தடைபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல் மின் தடை ஏற்பட்டது. பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், திடீர் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவிந்தன.

சமூக வலைதளங்களிலும் பலர் அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் திடீர் மின் தடை குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications