எடப்பாடிக்கு எதிர்பாராத சிக்கல்.. டெல்லிக்கு போன செங்கோட்டையன்.. அவரை பார்த்தாரா? சோலி முடிஞ்சுது
சென்னை: டெல்லி பயணம் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

அமித்ஷா - எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் இனி ஓ பன்னீர்செல்வம் சேர்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வேண்டுமென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இப்படி ஒரே டெல்லி பயணத்தில் எடப்பாடி இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
செங்கோட்டையன் டெல்லி பயணம்
டெல்லி பயணம் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில்தான் தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அந்த ஆலோசனையில், "திமுகவுக்கு வந்திடுங்களேன். உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக கொடுக்கும். நீங்கள் வந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்னு என்னிடம் சொன்னார் முதல்வர்.
ஆனால், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. காலம் எப்படி நகர்கிறதுன்னு பார்ப்போம்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். திமுகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். ஆனா, சசிகலாவும் தினகரனும் 'தேர்தலுக்குள் அதிமுக நம் கைக்கு வந்துடும். நீங்கதான் பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர். அதனால் எந்த அரசியல் முடிவையும் எடுக்காதீர்கள்னு சொல்றாங்க. நானும், அது தான் சரின்னு நினைக்கிறேன்" என்று செங்கோட்டையன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதனைக்கேட்ட அவரது ஆதரவாளர்கள், "நீங்க நினைப்பது சரிதான் அண்ணே. அதிமுகவில் இருந்து கொண்டு கட்சித் தலைமைக்கு நீங்கள் வரவேண்டும். அதுதான் சரி. கோர்ட்டில் எடப்பாடி தலைமைக்கு எதிராகப் போடப்பட்ட சிவில் வழக்கின் போக்கினை அறிந்து, அது நமக்கு எதிராக இருந்தால் மாற்றி யோசிக்கலாம் அண்ணே" என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் தயாரித்ததாகவும், ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் வைத்து விட்டார் என்றும் ஒரு தகவல் செங்கோட்டையன் தரப்பில் பரவியுள்ளது.
சந்திப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் . அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே பெரிய தலை ஒருவரை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு காரணமாக தனக்கு ஏற்பட்ட "சில நெருக்கடி" தொடர்பாக செங்கோட்டையன் அந்த டெல்லி புள்ளியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் பற்றி இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடக்கும்.. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications