சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் உருவான ''குளிர் அலை''.. இமயமலை காற்று.. திடீர் ஜில் கிளைமேட்டிற்கு என்ன காரணம் தெரியுமா?

சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் உருவான வானிலைக்கு என்ன காரணம் தெரியுமா?- வீடியோ

    சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

    சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30 டிகிரிக்கு அதிகமாக இருந்த வெப்பநிலை திடீர் என்று வேகமாக குறைந்தது.

    நேற்று சென்னையில் ஊட்டி, பெங்களூர் போல வானிலை நிலவியது. இதனால் சென்னை மக்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.

    எவ்வளவு குறைந்தது

    எவ்வளவு குறைந்தது

    சென்னையில் நேற்று வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது. சென்னையில் சில இடங்களில் 19 டிகிரி செல்ஸியஸ் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் யூகித்தது போல பேய்ட்டி புயல் இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனால் பேய்ட்டி புயலின் ஒரு முக்கிய குணாதிசியம் இந்த குளிருக்கு காரணமாக அமைந்துள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த புயல் காற்று கொஞ்சம் வித்தியாசமான காற்றாக உள்ளது. இது இமயமலையில் இருந்து நேரடியாக குளிர் காற்று மூலம் உருவான புயல் ஆகும். இமயமலை பகுதியில் இருந்து வந்த குளிரான காற்று சேர்ந்துதான் இந்த புயல் உருவானது. இதை குளிர் அலை என்று அழைப்பார்கள். அதனால்தான் நேற்று சென்னையில் திடீர் என்று குளிர தொடங்கியது.

    மழை இல்லை

    மழை இல்லை

    அதனால்தான் இந்த புயலால் சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு மழை இல்லை. சென்னையில் இந்த புயலால் பெரிய அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காற்றில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக மழை பெய்யவில்லை.

    எல்லா இடமும்

    எல்லா இடமும்

    அதேபோல் சென்னை மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் இதனால் பெரிய அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. 20 டிகிரி செல்ஸியஸ் வரை அங்கு வெப்பநிலை குறைந்து இருக்கிறது. திபெத் தொடங்கி பல வடமாநிலங்களிலும் இந்த குளிர் பரவும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

    English summary
    Why so cool?: The real reason behind sudden climate change in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X