Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாட்களாக ஏற்பட்ட கஷ்டம்.. இரவு 11.30 மணிக்கு நடந்த சம்பவம்.. டெல்லி கணேஷ் மறைவிற்கு என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் மரணம் நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளன.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லிகணேஷ்(80) காலமானார். நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்தவர்.

delhi ganesh

கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நிலை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது.

உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் படுத்தப்படுக்கையானார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர் பெரிதாக நகராமல் ஒரே பக்கமாக படுத்ததாக கூறப்படுகிறது. 9 மணிக்கு உறங்க சென்றவரை சோதித்ததில் 11.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் வயோதிகம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக வயோதிகம் காரணமாக அவரின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் மரணம் அடைந்தார். மற்றபடி அவரின் மரணத்திற்கு வேறு முக்கியமான நோய் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு முன்பு, அவர் டெல்லியை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக இருந்தார். கணேஷ் இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பணியாற்றினார், அதற்கு பின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த பணியில் இருந்து விலகினார். விலகினார். இவருக்கு டெல்லி கணேஷ் என்ற மேடைப் பெயர் கே.பாலசந்தரால் வழங்கப்பட்டது.

பட்டின பிரவேசம் (1976) திரைப்படத்தில் கே.பாலசந்தரால் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 1981ல் எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் கணேஷ். பெரும்பாலும் துணை நடிகராக அல்லது நகைச்சுவை நடிகராக நடித்தார். ஏன் நிறைய குறும்படங்களில் கூட நடித்துள்ளார். அதே சமயம் அவர் அபூர்வ சகோதரர்கள் (1989) போன்ற படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். இது போன்ற வேடங்கள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டன.

பாசி (1979) திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசைப் பெற்றார். அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய கலைமாமணி (1994) போன்ற பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றார். சிந்து பைரவி (1985), நாயகன் (1987), மைக்கேல் மதன காம ராஜன் (1990), ஆஹா..! (1997) மற்றும் தெனாலி (2000) ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நிலை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் படுத்தப்படுக்கையானார். இதையடுத்து நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது என்று குடும்பத்தினர் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+