அடுத்த டார்கெட்.. திமுகவிற்கு "அந்த" இடத்தில் கேட் போட்ட டெல்லி.. திடீர் ஐடி ரெய்டுக்கு என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்று ஒன்இந்தியா சார்பாக கடந்த 18ம் தேதி செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த செய்தியை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த வார ரெய்டு: கடந்த வாரம் தமிழ்நாட்டில் மணல் குவாரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகப் பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, திண்டுக்கல் எனப் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் இறங்கினர்.
ஆனால் இந்த ரெய்டுக்கு பின் உண்மையில் குறி வைக்கப்பட்டது யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இரண்டு அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்தது. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய மணல் குவாரி அதிபராக உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கினர்.
விரைவில் இந்த ரெய்டு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் நிதி பின்புலத்தை முடக்குவதே இந்த ரெய்டின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
அடுத்த ரெய்டு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன்படி, தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை செய்து வருகின்றனர். செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரணை செய்கின்றனர்.
செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது. செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ரெய்டில் வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி பெற்றவர்கள் முதல் டாஸ்மாக் தொடர்பான பணிகளில் இருக்கும் பலர் குறி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
டாஸ்மாக் டெண்டர் எடுத்தவர்கள், வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி டெண்டர் பெற்றவர்கள், பார் டெண்டர் பெற்றவர்கள் ஆகியோர் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிற்கு மணல் மூலம் பணம் வருகிறது. அதை முடக்கிவிட்டோம்... இனி டாஸ்மாக் மூலமாக திமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் பெறும் நிதியை கட் செய்து லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முடக்குவதுதான் நோக்கம் என்கிறார்கள்.
இதுதவிர மணல் ரெய்டுகள் பின்னணியில் கூடவே இருக்கும் இளம் தலைமுறை நிர்வாகிகளின் உளவு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் சீனியர்களை அந்தந்த மாவட்டங்களில் தட்டி வைக்க மத்திய அமைப்புகளுக்கு உளவு தந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் சீனியர்கள் பலர் இந்த ரெய்டில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மணல் ரெய்டு மூலம் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ரெய்டு மேல் ரெய்டு: பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.

கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். அதன்பின் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications