தலைகீழா மாறிட்டாரே "தலை".. பாஜக சீனியர்களுக்கு விழுந்த "இடி".. கப்சிப் மோடுக்கே போயிட்டாராமே.. நிஜமா
சென்னை: தேர்தல் பரபரப்புகள் சூடுபிடித்திருக்கும் சூழலில், கமலாலயமே கப்சிப் மோடுக்கு போய்விட்டதாக சொல்கிறார்கள்.. என்னவா இருக்கும்?
எம்பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி இன்னும் எந்த கட்சியிலும் முடிவாகவில்லை.. திமுக மட்டுமே, அதே பெரும்பான்மையான கட்சிகளுடன், வலுவாக உள்ளது.. அதேசமயம், உறுதியாக இன்னும் அறிவிக்கவில்லை.

அதிமுகவில் நிலைமை தலைகீழாக உள்ளது.. என்ன நினைத்து எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி உறவை முறித்து கொண்டாரோ, அதற்கான போதுமான பலன் கிட்டவில்லை. அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் முயற்சிக்கவில்லை.. மெகா கூட்டணியை உருவாக்க போவதாக, எடப்பாடி அறிவித்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில், அதற்கான அறிகுறியும் தென்படவில்லை.
பாஜக: அதிமுகவே இப்படியென்றால், பாஜக நிலைமை அதற்கு மேல் உள்ளது.. 5 மாநில தேர்தல் பிஸியில் மேலிட தலைவர்கள் இருந்ததால், தமிழகத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்தும்கூட, தமிழக அரசியல் விவகாரத்தில் தீவிரமாக இறங்கவில்லை என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், அந்த "தலை"யின் பெருத்த அமைதி பலவித சந்தேகத்தை கிளப்பி வருகிறதாம்.
மழை வெள்ளம், நிவாரணத்தொகை உள்ளிட்ட விவகாரங்களில், தமிழக அரசு மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார் என்றாலும், முன்புபோல் திமுக மீது பரபரப்பை கிளப்புவதில்லையாம்..
சாந்தம் : வழக்கமாக, திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க, தனக்கு கையில் கிடைத்த ஆதாரங்களை செய்தியாளர் கூட்டத்தில் அம்பலப்படுத்தி வந்தவர், தற்போது சாந்தமான மோடுக்கு சென்றுவிட்டாராம்.
கூட்டணி முறிவுக்குபிறகு, அதிமுக குறித்தோ அல்லது எடப்பாடி பழனிசாமி குறித்தோ பேச்சையே எடுக்காமல் இருந்தவர், தற்போது திமுக மீதும் அவ்வளவாக பாயாமல் இருக்கிறாராம். இந்த திடீர் அமைதிக்கு என்ன காரணம்? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், தன்னுடைய அரசியல் குரு பி.எல்.சந்தோஷூக்கு நாலாபக்கமும் எழும் அதிருப்திகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்..
பாஜக: அதாவது, கர்நாடகா பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் விஜயேந்திரா, தன்னுடைய மாநில அரசியலுக்குள் சந்தோஷ் நுழையவே கூடாது. ஒரு கவுன்சிலரிடம் கூட அவர் பேசக் கூடாது என்று தடை போட்டுள்ளதை, சொந்த கட்சியினரே எதிர்பார்க்கவில்லையாம்.. சந்தோஷ் விவகாரம் மிகுந்த அதிர்வலையை பாஜகவுக்குள் ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு சீனியரான தேஜஸ்வி சூர்யாவும், கர்நாடகா அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
பிஎல் சந்தோஷ், தேஜஸ்வி சூர்யாவுக்கே இந்த நிலைமையா? என்று அதிர்ந்து போயுள்ளதாம் தமிழக கமலாலயம்.. அதனால்தான், தற்போதைய நிகழ்வுகளில் ஐடி விங் நபர்களை முன்புபோல் களமிறக்காமல், "அமைதி" அரசியலை கையில் எடுத்துள்ளாராம் "தலை".
-
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications