தங்கம் விலையில் சலசலப்பு.! கேப் விடாமல் ஒரு வாரமாக சரிய காரணம் என்ன? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.180க்கு மேல் குறைந்துள்ளது. இதற்கிடையே தங்கம் விலை குறைந்ததற்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை இம்மாதத் தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி இதுவரை இல்லாத வகையில் 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9470 வரை போனது. ஆனால், அதன் பிறகு கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஒரு நாள் கூட அதிகரிக்கவே இல்லை.

தங்கம் விலை
ஒரு வாரத்தில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.9280 என்ற ரேஞ்சுக்கு விற்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸாகவே இருந்தது. அதேநேரம் தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைந்த அளவுக்குக் குறையவில்லை என்கிறார் ஆனந்த் சீனிவாசன். இதற்கான காரணத்தை விளக்கியுள்ள அவர், மேலும் சர்வதேச சந்தையில் முதலில் தங்கம் விலை குறைய என்ன காரணம் என்பதையும் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "ரூபாய் மதிப்பை ஹோல்ட் செய்வது கடினமாக இருக்கிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் என்றே நினைக்கிறேன். இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் பெரியளவில் தங்கம் விலை விழுந்தாலும் கூட இந்தியாவில் தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை. சரி, சர்வதேச சந்தையில் ஏன் தங்கம் விலை திடீரெனச் சரிந்தது என்ற கேள்வி வரும். அதைப் பார்க்கலாம்.
டிரம்ப் சம்பவம்
உலகளவில் சுவிட்சர்லாந்து தான் தங்கத்தை டெஸ்ட் செய்து, சுத்தம் செய்து, தங்க பாராக மாற்றும் இடம். அங்கிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரி விதிக்கப்போவதாக டிரம்ப் சொன்னார். ஆனால், இப்போது டிரம்ப் வழக்கம் போல பல்டி அடித்து நான் தங்கத்தை சொல்லவே இல்லை. தங்கத்திற்கு வரி இல்லை என சொல்லிட்டார். இதன் காரணமாகவே தங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அவர் இன்று என்ன சொல்வார். நாளை என சொல்லுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்தியாவில் தங்கம் விலை அதை பொறுத்தே மாறும்.. எனவே நாம் தயாராக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த டேட்டா சமீபத்தில் வந்திருந்து. ஒரு தரப்பினர் பணவீக்கம் 2.9%ஆகவே இருப்பதாக சொல்லியுள்ளனர். அதாவது பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு ஏறவில்லை.. கொஞ்சம் மட்டும் ஏறியுள்ளதாகச் சொன்னார்கள். அதுவும் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். அதேநேரம் எரிபொருள், உணவு இல்லாமல் கணக்கிடப்படும் கோர் பணவீக்கம் 3.1%ஆக உயர்ந்துவிட்டது.
இனிமேல் எப்படி இருக்கும்
இதனால் மீண்டும் செப்டம்பரில் வரி குறைப்பு இருக்குமா இருக்காதா என அமெரிக்கர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியைக் குறைத்தாலும் கூட அது பெரியளவில் இருக்காது. செப்டம்பர் மாதம் 0.25% மட்டுமே குறைப்பார்கள். அதன் பிறகு அக்டோபர், நவம்பரில் வட்டி குறைப்புக்கு வாய்ப்பு குறைவு.
அதையும் தாண்டிக் கட் செய்தாலும் 3 மீட்டிங்குகளில் தலா 0.25% என்று 0.75% மட்டுமே குறையும். இதனால் இந்தியாவுக்கு நல்ல விஷயம் என எதுவும் இருக்காது. ஆனால், இது நடந்தால் தங்கம் விலை மீண்டும் ராக்கெட்டில் ஏறி பறக்க ஆரம்பித்துவிடும்" என்றார்.
கவலை வேண்டாம்
அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது அமெரிக்காவில் கோல்ட் ப்யூச்சர்ஸ் 3400 டாலருக்கு கீழ் போய்விட்டது. இங்கேயும் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனாலும், கெத்தாக மேலே தான் இருக்கிறது. இப்போது ஒரு கிராம் தங்கம் நல்ல நிலையில் தான் இருக்கிறது. நமக்கு கவலையே கிடையாது. சீக்கிரமே டாலர் மதிப்பு விழும். ரூபாய் மதிப்பும் விழும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும். தங்கம் விலை விழுந்தால் அது நல்ல வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications