ஷாக்! சென்னை ரிப்பன் மாளிகையில் காத்திருந்த அதிர்ச்சி.. கட்டிடத்திற்கு ஆபத்தா? என்ன தான் நடந்தது
சென்னை: சென்னை மாநகராட்சியின் கட்டிடமான புகழ்பெற்ற ரிப்பன் மாளிகையில் திடீரென பெரிய விரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.
தலைநகர் சென்னையில் தினசரி பல நூறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் பல வானுயர்ந்த கட்டிடங்களாகவும் கூட உயர்ந்து நிற்கிறது. புது புது கட்டிடங்கள் வந்தாலும் கூட பழைய கட்டிடங்களுக்கு இங்கே என்றும் மவுசு குறைவதே இல்லை.

அதன்படி நகரின் முக்கிய பழமையான கட்டிடங்களில் ஒன்றாக இருப்பது ரிப்பன் மாளிகை.. சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை 110 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட்டிடத்தில் திடீரென ஏற்பட்டுள்ள விரிசல் தான் இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரிப்பன் மாளிகை: நகரின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த இப்போது சென்னை முழுக்க மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.. அதன்படி ரிப்பன் மாளிகை பகுதியிலும் மெட்ரோ பணிகள் நடைபெற்றது. இருப்பினும், மெட்ரோ நிர்வாகம் இரண்டு ஆண்களுக்கு முன்பே அங்கு பணிகளை முடித்து ரிப்பன் மாளிகை வளாகத்தை மீண்டும் கிரேட்டர் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டது.
இந்தச் சூழலில் இப்போது திடீரென ரிப்பன் மாளிகையின் முகப்பில் பெரிய விரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல்கள் தங்கள் திட்டத்தால் ஏற்படவில்லை என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதேபோல மாநகராட்சி அதிகாரிகளும் இவை சிறிய விரிசல்கள் தான் என்றும் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ளதால் இவை கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைக்கு எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது என தெரிவித்தனர்.

அதிகாரிகள் விளக்கம்: இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"இது பெரிய விரிசல் இல்லை.. இதனால் கட்டிடத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இதை உடனடியாக சரி செய்துவிடலாம்.. இப்போது மெட்ரோ நிர்வாகத்தின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.. சுரங்க பணிகள் வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் சொல்லிவிட்டால்.. நாங்கள் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்" என்றார்.
என்ன நடந்தது: கடந்த 2010ஆம் ஆண்டில், ரிப்பன் கட்டடத்திற்கு அருகில் உள்ள 4,507 சதுர மீட்டர் நிலத்தை சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனுக்காக தமிழக அரசு ஒதுக்கியது. ரிப்பன் மாளிகைக்கு அருகே 16 மீட்டர் ஆழத்தில் கடினமான பாறைகள் இருந்தன. அந்த கடினமான பாறைகளை உடைக்க முடியாமல் இயந்திரங்கள் கூட பழுதடைந்தன. இதனால் அந்த பாறைகளை உடைக்க சிரமம் ஏற்பட்டது. அப்போது தான் முதலில் ரிப்பன் மாளிகையில் விரிசல்கள் தோன்றத் தொடங்கின.
அப்போதும் கூட தங்கள் பணிகளால் எந்தவொரு விரிசலும் ஏற்படவில்லை என்பதைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து விளக்கமளித்து வந்தது. மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு, ரிப்பன் மாளிகை புதுப்பிக்கப்பட்டுக் கடந்த 2019இல் அது மீண்டும் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது ரிப்பன் கட்டிட முகப்பில் விரிசல்கள் ஏற்பட்டு வருகிறது.

கோரிக்கையும் பதிலும்: இதற்கிடையில், கட்டிடத்தின் நிலைத்தன்மை குறித்த தரவுகளைச் சேகரிக்கச் சோதனை கருவியையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் நீக்கியுள்ளது. ரிப்பன் மாளிகையின் உறுதித்தன்மை குறித்த அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தியிருந்தனர். இருப்பினும், மெட்ரோ நிர்வாகம் அதுபோல எந்தவொரு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை.
ரிப்பன் மாளிகை மற்றும் விக்டோரியா மண்டபத்தில் விரிசல் ஏற்பட என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது என்று மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கட்டிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகையைச் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், குறைபாடுகளைச் சரிசெய்ய மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications