சென்னையில் பலருக்கும் சொத்து வரி உயர என்ன காரணம்.. நொடியில் கண்டுபிடித்த டிஜிட்டல் சிஸ்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில், தவறான கணக்கீடு அல்லது குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத்தான் திருத்தப்பட்ட சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இந்தப் பரப்பளவு வேறுபாடுகள் புவியியல் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் தரவு, பிற அரசுத் தரவுகள் மற்றும் உரிமையாளர்களின் சுய பிரகடனம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் டிஜிட்டல் முறையினை பயன்படுத்தி சொத்துவரி போட்டிருப்பதாகவே தெரிகிறது. நொடியில் கண்டுபிடித்து டிஜிட்டல் சிஸ்டத்தால் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை பார்ப்போம். சொத்துவரி முன்பு எப்படி கணக்கிடுவார்கள் என்றால் நேரடியாக அதிகாரிகள் வீடு, வீடாக,கடை, கடையாக சென்று வரி விதிப்பார்கள்.இந்த வரி விதிப்பு என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவது வழக்கம். அதாவது மாநகராட்சி ஒவ்வொரு பகுதியையும், தெருவையும் பார்த்து பார்த்து வகைப்படுத்தி, ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் என அடிப்படை மண்டல மதிப்பு நிர்ணயித்திருக்கும். பயன்பாட்டில் உள்ள முறை (குடியிருப்பு / வணிகம்) மற்றும் கட்டிடத்தின் தன்மை கியவற்றிற்குத் தனித்தனியாகச் சதவீத அடிப்படையில் விலக்குகள்/மாற்றங்களை செய்வது வழக்கம்.

What is the reason for the property tax hike for Chennai Corporation Digital system identifies the cause

அதேபோல் சொத்து உரிமையாளரே தனது கட்டிடத்தின் நீள, அகலங்களை அளந்து, எத்தனை சதுர அடி உள்ளது, எத்தனை மாடிகள் உள்ளது, அது சொந்த உபயோகமா அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளதா என்ற விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்து மாநகராட்சியிடம் சமர்ப்பித்து இருப்பார். அந்த அடிப்படையில் தான் பெரும்பாலும் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். வெளிப்படையாக சொல்வது என்றால், உரிமையாளர்கள் கூறிய தகவலின்படி மட்டுமே சொத்துவரி இத்தனை ஆண்டுகளாக நிர்ணயம் செய்து வந்தார்கள்.

இப்போது என்ன சிக்கல் என்றால், நொடியில் கண்டுபிடித்து டிஜிட்டல் சிஸ்டத்தை வைத்து வரி விதித்து இருக்கிறார்கள். உண்மையை சொல்வது என்றால், கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை, கோவை போன்ற பெருநகர மாநகராட்சிகளில் ட்ரோன் சர்ேே மற்றும் GIS என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புவியியல் தகவல் அமைப்பு மேப்பிங் திட்டங்கள் தீவிரமாக நடந்து வந்தது. ஒவ்வொரு தெருவாக ட்ரோன்களைப் பறக்கவிட்டு, ஒவ்வொரு கட்டிடத்தின் 3டி அளவீடுகள் ஏற்கனவே டிஜிட்டல் வரைபடமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் அனைத்து அரசுச் சேவைகளும் ஆதார், சொத்து வரி கணக்கு எண், மின் இணைப்பு எண் மற்றும் கட்டிட அனுமதி எண்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. எனவே சென்னை மாநகராட்சி தங்களின் 3D வரைபடத்தை கட்டட அனுமதித் தரவுகள் மற்றும் மின்சார வாரிய தரவுகளுடன் கணினி மூலமாகவே ஒப்பீடு செய்து கண்டுபிடிக்கிறார்கள்.

"அனுமதி பெற்ற சதுர அடி எவ்வளவு? ட்ரோன் காட்டும் தற்போதைய சதுர அடி எவ்வளவு?" என்பதை சாப்ட்வேர் மூலமாகவே அதிகாரிகளால் நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். ஏனெனில் அதிகாரிகள் நேரில் சென்று அளப்பது என்றால் லட்சக்கணக்கான வீடுகளுக்கு மாதக்கணக்கில் ஆகும்; அதோடு லஞ்சப் புகார்களும் அதிகரிக்கும். எனவே சிஸ்டம் மூலமாகவே வேறுபாடுகளைக் கண்டறிந்து தானாகவே நோட்டீஸ் உருவாக்கும் முறையை மாநகராட்சி அமல்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதானால் தான் இந்த முறையை Computer Generated என்று அதிகாரிகளே கூறுகிறார்கள்.

இதில் துல்லியம், லஞ்சம் இருக்காது என்றாலும், சில ஆபத்துகளும் இருக்கிறது. அதுதான் மக்களின் கோபத்திற்கும், குமுறுவதற்கும் காரணமாக பார்க்கப்படுகிறது. மாடியில் போடப்பட்டிருக்கும் வெறும் கூரைத் தகரம், கார்ப்பார்க்கிங் பகுதி அல்லது பக்கத்து வீட்டு நிழலைக்கூட சிஸ்டம் "புதிய மாடி" எனக் கணக்கிட வாய்ப்பு உள்ளது. அதேபோல் சொந்த வீட்டின் ஒரு பகுதியைச் சும்மா பூட்டி வைத்திருந்தால் கூட, அதை வணிகப் பயன்பாடு எனத் தவறாகச் சிஸ்டம் வகைப்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரே அளவிலான வீடுகளுக்கு ஒருவருக்கு 26 ஆயிரம், பக்கத்து வீட்டிற்கு 4 ஆயிரம் எனத் தவறான தரவுகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் பொதுமக்கள் தாங்களாகவே தந்தத "சுய பிரகடன" படிவங்களில், கட்டடத்தின் உண்மையான பரப்பளவை விடக் குறைவாகக் குறிப்பிட்டிருக்கலாம். 1500 சதுர அடி கட்டிடம் கட்டிவிட்டு, ஆவணங்களில் 1000 சதுர அடி எனக் காட்டியிந்தால் அதனை டிஜிட்டல் சிஸ்டம் கண்டுபிடித்திருக்கும். அதேபோல் வரி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, மாநகராட்சிக்குத் தெரிவிக்காமல் மாடியில் கூடுதல் அறைகளோ அல்லது வீட்டின் பின்புறம் கூடுதல் கட்டடங்களோ கட்டப்பட்டிருந்தாலும் மாநகராட்சி எளிதாக இன்று கண்டுபிடித்துவிடும்.

அதேபோல் குடியிருப்புப் பயன்பாடு என்று கூறிவிட்டு, அந்த இடத்தில் அலுவலகம், கடை அல்லது வாடகைக்கு வணிக நிறுவனங்கள் நடத்தியிருந்தாலும் வரி அதிகமாக விதிக்கப்பட்டிருக்கும். எனினும் டிஜிட்டல் கணக்கீட்டில் சில பிழைகள் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே தான், ஏராளமான சென்னைவாசிகள் இன்று சொத்துவரி அதிகமாக வந்துள்ளதாக குமுறுகிறார்கள். 15 நாட்களில் முறையிட்டு தீர்வு காணலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 15 நாட்களில் உங்கள் குறைகளை தெரிவித்தால் சரி செய்து தருவார்கள். 30 நாட்கள் கழித்து மேல்முறையீடும் செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+