விஜயகாந்துக்கு என்ன நடந்தது? மரணத்தில் மர்மம் இருக்கு.. மகன் முன்பே பகீர் கிளப்பிய மன்சூர் அலிகான்
சென்னை: விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதையே மறைத்துவிட்டார்கள் என நடிகர் மன்சூர் அலிகான் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் கடந்த மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில்தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், விஜய், அஜித், ஜெய்ரவி, கமல், நாசர், நடிகைகள் தேவயானி உள்ளிட்டோர் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரவர் விஜயகாந்த் குறித்து தங்களுக்கு தெரிந்த கருத்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் மன்சூர் அலிகான் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். மன்சூர் விஜயகாந்துக்கு நல்ல நண்பராக மாறினார். அவர் வீட்டு திருமணத்திற்கு கூட விஜயகாந்த் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அது போல் கேப்டன் இறந்தவுடன் கவலை தோய்ந்த முகத்துடன் அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தை விட்டு எங்கும் செல்லாமல் நீண்ட நேரமாக இருந்தவர் மன்சூர் அலிகான்.
அப்படிப்பட்ட அவர் பேசுகையில் விஜயகாந்த் நிஜத்திலுமே மாமனிதனாக வாழ்ந்தவர். கேப்டன் உடல்நலம் மோசமான போதே நானெல்லாம் செத்து போய்ட்டேன். விஜயகாந்த் உடல்நலம் மோசமானதுக்கு என்ன ட்ரீட்மென்ட், என்ன ஏதுன்னு எந்த விவரமும் சொல்லப்படலை.
அதுல சில மன வருத்தங்கள் எனக்கு இருக்கின்றன. அதை பற்றி நான் இங்க பேசலை. ஆனால் என்னால் தாங்க முடியவில்லை. அத்தனை வேதனையா இருக்கு என தெரிவித்திருந்தார். இது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாகியது. விஜயகாந்தின் மகன்களும் மனைவியும் அவரை கண்ணுக்குள் வைத்து பார்த்து க் கொண்ட நிலையிலும் அவர் குறித்து இப்படி பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications