இந்த ஜாம்பவான்களின் தம்பியா பாபர் அசாம்? இவ்வளவு நாள் தெரியாம போச்சே.. பாகிஸ்தான் கேப்டனின் பின்னணி
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் தம்பி என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை, பாகிஸ்தானில் நடந்து வருகிறது. மொத்தம் 6 அணிகள் இருபிரிவுகளாக பங்கேற்றுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும். அதில் வெல்லும் 2 அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் தான் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் ஹைவோல்டேஜ் போட்டியான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதி வருகின்றன.
பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து 2வது வெற்றியை நோக்கி பாகிஸ்தான் இன்று இந்தியாவுடன் மோதுகிறது. அதேவேளையில் இந்தியா இன்று தான் முதல் போட்டியாக பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டி வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகியோருக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளதாம். அதாவது பாபர் அசாம், கம்ரான் அக்மல் உமர் அக்மல் ஆகியோர் கசின். புரியும்படி கூற வேண்டும் என்றால் 3 பேரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்.
இதில் கம்ரான் அக்மலுக்கு 41 வயது ஆகிறது. இவர் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னாக இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக இவர் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் கம்ரான் அக்மலின் உடன்பிறந்த தம்பி உமர் அக்மல் 33 வயது ஆகிறது. இவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னாக களமிறங்கி அதிரடியாக ஆடக்ககூடியவர்.
கம்ரான் அக்மல், உமர் அக்மலின் தம்பியான பாபர் அசாம் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க இவர்கள் 2 பேரின் வழிக்காட்டுதல்களும், அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. தற்போது உலக அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்னாக விராட் கோலி இருக்கும் நிலையில் அவருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார் இந்த பாபர் அசாம்.
இதற்கிடையே தான் அடிக்கடி கம்ரான் அக்மல், உமர் அக்மல் உள்ளிட்டவர்கள் உரிமையுடன் பாபர் அசாமுக்கு அறிவுரைகளை கூறுவதும், தவறை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications