துணை முதல்வராகும் உதயநிதி.. எம்எல்ஏ சம்பளத்தை விட அவரது சம்பளம் கம்மி.. பிற சலுகைகள் என்ன தெரியுமா!
சென்னை: இன்று தமிழ்நாட்டில் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். இத்தனை காலம் அமைச்சராக இருந்த அவர் இப்போது துணை முதல்வராக பதவியேற்கும் நிலையில், அவருக்கு அரசு வழங்கும் சம்பளம் எவ்வளவு, அவருக்கான சலுகைகள், அதிகாரங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வரும் என நீண்ட காலமாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அது ஒரு வழியாக இப்போது நடந்துள்ளது. உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 4 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 3 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதியின் சம்பளம், உள்ளிட்ட பிர சலுகள் பற்றி நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் முதல் துணை முதல்வர் என்றால் அது தற்போது முதல்வராக உள்ள மு.க. ஸ்டாலன் தான். கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் 2009 முதல் 2011ம் ஆண்டு வரை மு.க. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். 2011 முதல் 2017 வரை துணை முதல்வர் பதவியில் யாரும் இல்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது தனித்தனியாக இயங்கி வந்த எடப்பாடி- ஓபிஎஸ் அணி ஒன்றிணைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் ஓபிஎஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதன்படி 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியில் இருந்தார்.
இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி துணை முதல்வராக பதவியேற்கும் நிலையில், அவரது சம்பளம் என்னவாக இருக்கும்.. அவருக்கான சலுகைகள் அதிகாரங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலரும் எழும் இது குறித்து நாம் விரிவாக பார்க்காலம்.

துணை முதல்வர் பதவி தொடர்பாக நமது அரசியலமைப்பு நேரடியாக எதுவும் சொல்லவில்லை. ஆளுநர் தனது பணிகளை செயல்படுத்த மற்றும் ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் பிரிவு 163 (1) தெளிவாக கூறுகிறது. மேலும், முதலமைச்சரை ஆளுநர் நியமிக்க வேண்டும், மற்ற அமைச்சர்கள் முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்று பிரிவு 163 அல்லது பிரிவு 164 (1) கூறுகிறது
அதாது துணை முதல்வர் பதவி குறித்து சட்டம் எங்கும் கூறவில்லை. இதனால் துணை முதல்வர் பதவி என்பது மாநிலத்தில் உள்ள மற்ற கேபினட் அமைச்சருக்கு சமமான பதவி என்றே சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது துணை முதல்வர் என்று அழைக்கப்பட்டாலும் முதல்வருக்கான அதிகாரம் எதுவும் இருக்காது. மற்ற அமைச்சர்களின் அதிகாரம், சலுகைகளை போலவே துணை முதல்வருக்கான அதிகாரம், சலுகைகளும் இருக்கும்.
எனவே, சம்பளமும் அமைச்சருக்கு எவ்வளவு சம்பளம் தரப்படுமோ அதே சம்பளம் தான் துணை முதல்வருக்கு கிடைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை அமைச்சர் பதவியில் இருப்பவருக்கு ரூ. 76,800 சம்பளமாக வழங்கப்படுகிறது. இதை தமிழக அரசே கடந்தாண்டு நீதிமன்றத்தில் கூறியிருந்தது. அதாவது கடந்தாண்டு செந்தில் பாலாஜி கடந்தாண்டு கைது செய்யப்பட்ட போது, சிறையில் இருந்த போதும் சில காலம் அமைச்சராக இருந்தார்.
அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, சிறையில் இருப்பவர் அமைச்சர் பதவியில் இருப்பதால் தேவையில்லாமல் சம்பளம் தர வேண்டி உள்ளதாக வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பு, "ஒரு எம்எல்ஏவின் மாதச் சம்பளம் ₹1.05 லட்சம். அதேநேரம் அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்ட எம்எல்ஏவின் மாதச் சம்பளம் ₹76,800 மட்டுமே" என்று கூறப்பட்டது.
அதன்படி பார்க்கும் போது இப்போது துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதிக்கும் மாதச் சம்பளம் ₹76,800ஆக மட்டுமே இருக்கும். மேலும், அமைச்சருக்கு எப்படி அரசு குடியிருப்பு, அரசு வாகனம் உள்ளிட்ட சலுகைகளும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதோ அதே தான் துணை முதல்வருக்கும் பொருந்தும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications