விமான பணிப்பெண்ணுக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஏர் ஹோஸ்டஸ் ஆக தகுதி என்ன?
சென்னை: விமான பணிப்பெண்ணின் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? விமான பணிப்பெண் ஆக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். விமானத்தில் அவர்களின் பணி என்ன என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
ஏர் ஹோஸ்டஸ் என்றாலே நன்கு ஒல்லியான தேகம், பிரமிப்பூட்டும் அழகு, பணிவான பேச்சு, நுனி நாக்கில் ஆங்கிலம், சகல மொழிகளும் அத்துபடி- இவைதான் நினைவுக்கு வரும். இந்த வேலை என்பது எத்தனை சவாலான காரியம் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

விமானத்தில் பலதரப்பட்ட பயணிகள் வருவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். இவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். நல்லதொரு ஊதியமும் இவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
இளம்பெண்கள் ஏர் ஹோஸ்டஸ்ஸாக வேண்டும் என்பது கனவாக இருக்கும். இதற்காக பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. என்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை போல் இந்த ஏர்ஹோஸ்டஸ் துறைக்கும் அதிக கிராக்கி இருக்கிறது.
ஏர் ஹோஸ்டஸ் ஆக ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்ற பிறகு விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 12 ஆம் வகுப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களையாவது பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதி மட்டும் இல்லாமல் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேச வேண்டும்.
தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட வெளிநாடு மொழிகள் தெரிந்தால் வாய்ப்புகள் உலக அளவில் கிடைக்கும். அது போல் உயரமும் எடையும் முக்கியம். ஏர் ஹோஸ்டஸ் ஆக ஒரு பெண் 5.5 அடி உயரமும் 55 கிலோ முதல் 60 கிலோ வரை எடையும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்ய விரும்பினால், நிறம், உணவு முறை, வாழ்க்கை முறை, உடை குறித்தும் அறிந்திருந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏர் ஹோஸ்டஸ் ஆக 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். கண் பார்வையும் நன்றாக இருத்தல் வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேல் பொறுமை அவசியம். இந்த பணிக்கு 2 ஆண்டுகள் படிக்க வேண்டும். இந்தியாவில் விமான பணிப்பெண்களின் சராசரி சம்பளமாக ரூ 1,16,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் ஹோஸ்டஸ்கள் புத்திசாலித்தனமாக இருத்தல் முக்கியம். அப்போதுதான் எப்படிப்பட்ட பயணிகளையும் சூழல்களையும் அவர்களால் சமாளிக்க முடியும்.
இவர்களது பணி தேசிய , சர்வதேச , வணிக, பட்டய மற்றும் ராணுவ விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியை உறுதி செய்வதே அவர்களுடைய பணியாகும். விமான விதிகள் குறித்து பயணிகளுக்கு விளக்க வேண்டும். விமானத்தின் தூய்மை, இருக்கைகள், உணவுகள் சரியாக உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
பயணிகளை வரவேற்று அவரவர் இருக்கைகளுக்கு செல்ல வழிகாட்டிட வேண்டும். அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என்பதையும் சரி பார்க்க வேண்டும். பயணிகளுக்கான உணவை கொடுத்தல், மருத்துவ பராமரிப்பு , மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications