"IAS அந்தஸ்து! மாதம் ₹1.5 லட்சம் சம்பளம்.." ராதன் பண்டித்திற்கு கடைசி நேரத்தில் நழுவிய சலுகைகள் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதலமைச்சர் அலுவலகத்தின் சிறப்புப் பணி அலுவலராக (OSD - Political) நியமித்திருந்தார். அது பெரும் புயலைக் கிளப்பியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஒருவேளை ராதன் பண்டித் அரசு அந்தப் பணியில் தொடர்ந்திருந்தால் அவருக்கு என்ன சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைத்திருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் அரியணை ஏறுவார் என முன்கூட்டியே கணித்தவர் இந்த ராதன் பண்டிட். அதுமட்டுமல்ல, கடந்த மே 10ம் தேதி பதவியேற்பு விழாவுக்கு நல்ல நேரம் குறித்துச் சொன்னவரும் இவர் தான் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஜோதிடர் ராதன் பண்டித்திற்கு அரசு பதவி தரப்பட்டு இருந்தது.

Vijay

பதவி வாபஸ்

இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று சட்டசபையிலேயே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் இது தொடர்பாகக் கோரிக்கை வைத்திருந்தனர். அப்போது இது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது ராதன் பண்டித் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க.. ஜோதிடர் ராதன் பண்டிட் ஒரு வேளை அந்தப் பதவியில் தொடர்ந்திருந்தால் அவருக்குக் கிடைத்திருக்கும் அதிகாரமும் சலுகைகளும் என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

முதல்வருக்கு நெருக்கமான பதவி

'OSD (Political)' என்பது முதலமைச்சர் அலுவலகத்திற்கும், அரசியல் கட்சிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்படும் பதவியாகும். அரசின் நிர்வாக முடிவுகளில் விஜய்க்குப் பக்கபலமாக இருப்பதோடு, அரசியல் ரீதியான ஆலோசனைகளையும் இவர் வழங்குவார். முதலமைச்சருக்கு மிக நெருக்கமான அதிகாரமிக்க இடமாக இது பார்க்கப்படுகிறது.

ஊதியம் எவ்வளவு?

இவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இணையான அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக இது போன்ற பதவிகளுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ₹80,000 முதல் ₹1.5 லட்சம் வரை வழங்கப்படும். இது தவிரக் கூடுதல் சலுகைகளாக அகவிலைப்படி (DA), அரசு வாகனம், வீட்டு வாடகைப்படி (HRA) அல்லது அரசு குடியிருப்பு, மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை கிடைக்கும். இவை அனைத்தும் அரசுப் பணத்தில் வழங்கப்படவுள்ளது என்பதுதான் விமர்சனங்களுக்குக் காரணமாக இருந்தது..

எதிர்ப்பு

விஜய்யின் இந்த நியமனத்திற்குப் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், "இனி சட்டமன்றத்திற்கு வேலையே இல்லை; ஜோதிடர்கள் சொல்லும் நேரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் போலிருக்கிறது!" என்று சாடினார். அதேபோல தேமுதிகவின் பிரேமலதா, "உங்களுக்கு வாக்களித்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன முன்னுதாரணம் காட்டப் போகிறீர்கள்? உங்கள் குருவை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள், அரசுப் பதவி கொடுக்காதீர்கள்!" என்றார். அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்ட அரசுதான் நமக்குத் தேவை, ஜோதிடம் அல்ல என்று விசிக & இடதுசாரிகளும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின

ராதன் பண்டிட் ஒன்றும் அரசியலுக்குப் புதியவர் அல்ல. 90-களின் இறுதியிலிருந்து 2014-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஜோதிடராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+