Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? இவ்வளவு சலுகைகளா? அடேங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியலமைப்பில் முதல் குடிமகனாக இருக்கும் குடியரசுத் தலைவருக்கும், அதை தொடர்ந்து ஏராளமான அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் பிரதமருக்கும் எவ்வளவு சம்பளம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன? உள்ளிட்டவை குறித்த விவரங்களை இந்த செய்தி விவரிக்கிறது.

குடியரசுத் தலைவருக்கான சலுகைகள்: குடியரசுத் தலைவருக்கான ஊதியத்தை 1951 ஜனாதிபதியின் சாதனை மற்றும் ஓய்வூதியச் சட்டம் தீர்மானித்திருக்கிறது. தற்போது குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் அரசாங்க பதவி இதுதான்.

What is the salary of prime minister of India per month
  • இது தவிர அவருக்கு அனைத்திலிருந்தும் வரிச் சலுகைகள் இருக்கின்றன. அதேபோல ஊதியம் தவிர பல அலவென்ஸ்களும் வழங்கப்படுகின்றன.
  • குடியரசுத் தலைவர் தங்குவதற்கென 370 அறைகள் கொண்ட 'ராஷ்டிரபதி பவன்' எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகை வழங்கப்படுகிறது.
  • இவருக்கு வீட்டு வசதி மற்றும் மருத்துவம் மற்றும் அலுவலகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
  • குடியரசுத் தலைவர் உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரயிலிலும், விமானத்திலும் இலவசமாக பயணிக்க முடியும்.
  • ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது
  • ஓய்வு பெற்ற பின்னர் குடியரசுத் தலைவர் தங்குவதற்காக வாடகை இல்லாத அரசு மாளிகை ஒன்றும், 2 லேண்ட்லைன்கள் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவை வழங்கப்படும்.
  • முன்னாள் குடியரசுத் தலைவருக்காக 5 தனிப்பட்ட ஊழியர்கள் எப்போதும் பணியாற்றுவார்கள். அவர்களுக்காக ஆண்டுக்கு ரூ.60000 வரை அரசு செலவிடுகிறது.
  • குடியரசுத் தலைவர் ஓய்வு பெற்றாலும் கூட அவருக்கும் அவருடைய கணவர்/மனைவி என கூடுதலாக ஒருவருக்கும் ரயில் மற்றும் விமானங்களில் இலவச பயண சலுகை வழங்கப்படுகிறது.

குடியரசுத் துணை தலைவருக்கான சலுகைகள்: குடியரசுத் தலைவருக்கு அடுத்து குடியரசுத் துணை தலைவர் இருக்கிறார். ராஜ்ய சபாவுக்கு இவர்தான் முழுமையான பொறுப்பு. அதுமட்டுமல்லாது குடிரசுத் தலைவர் இல்லாத போது அந்த இடத்தில் குடியரசு துணை தலைவர்தான் குடியரசுத் தலைவராக பணியாற்றுவார். அப்போது குடியரசுத் தலைவருக்கு என்னென்ன சலுகைகள் உண்டோ அவை அனைத்தும் குடியரசுத் துணை தலைவருக்கும் பொருந்தும்.

  • இவருக்கு மாதம் ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். தவிர ஏராளமான அலவென்ஸ்களும் உண்டு.
  • மருத்துவம், ரயில், விமான பயணங்கள் இலவசம். லேண்ட்லைன் தொலைப்பேசி இணைப்பு, மொபைல் ஃபோன் ஆகியவை வழங்கப்படும்.
  • இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக பணியாளர்கள் உண்டு.
  • குடியரசுத் துணைத் தலைவர் ஓய்வ பெற்றால் அவருக்கு மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பிரதமருக்கான சலுகைகள்: இந்திய அரசியலமைப்பில் மூன்றாவதாக அதிக அதிகாரங்களை கொண்ட நபர் பிரதமர்தான். இவருக்கு மாதம் ஊதியமாக ரூ. 1.66 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் இவருடைய அடிப்படை ஊதியம் ரூ.50 ஆயிரமாகும்.

  • இது தவிர அலவென்ஸாக ரூ.3000 மற்றும் நாடாளுமன்ற உதவித் தொகையாக ரூ.45,000ஐ பெறுகிறார். தவிர தினமும் ரூ.2000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
  • பிரதமருக்கு வாடகை இல்லாமல் வீடு கொடுக்கப்படுகிறது.
  • அதேபோல அவரது பாதுகாப்புக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) பொறுப்பு வகிக்கிறது.
  • பிரதமரின் பயணத்திற்கு ரயில், விமானம் போன்றவற்றில் இலவச அனுமதி இருக்கிறது
  • அவர் வெளிநாடு செல்லும்போது, தங்கும் செலவு மற்றும் உணவு செலவுகளை அரசே ஏற்றுக்கொள்கிறது.
  • பிரதமரின் ஓய்வுக்கு பின்னர், தங்குவதற்கு இலவச வீடு, மின்சாரம் ஆகியவை வழங்கப்படும். அதேபோல ஓய்வு பெற்ற முதல் 5 ஆண்டு வரை SPG பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

எம்பிக்களுக்கான சலுகைகள்: நாடாளுமன்றத்தின் லோக்சபா உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தவிர சில அலவென்ஸ்களும் இருக்கின்றன.

  • 2010ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவென்ஸ் மற்றும் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டத்தின்படி எம்பிக்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது.
  • இது தவிர நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்பிக்களுக்கு தினமும் ரூ.2000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • சாலை மார்க்கமாக எம்பிக்கள் பயணித்தால் அவர்களுக்கு ஒரு கி.மீக்கு ரூ.16 என உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • இது தவிர உதவி தொகையாக மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் பெறுகிறார்கள்.
  • அலுவலக செலவுகளுக்கு ரூ.45 ஆயிரம், தபால் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் எம்பிகள் தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தினருடைய மருத்துவ செலவுக்காக ரூ.500ஐ செலுத்துகிறார்கள். இவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
  • மேலும் எம்பிக்களுக்கு அவர்கள் பதவியில் இருக்கும் வரை தங்குவதற்கு என வீட்டு வசதி செய்து கொடுக்கப்படும். பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர்கள் அந்த வீட்டை காலி செய்ய வேண்டும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+