Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேட்டா அப்படியே ஆடி போயிடுவீங்க.. இந்திய ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்பை மற்றும் டெல்லியில் திறக்கப்பட்டு உள்ள நேரடி ஆப்பிள் ஸ்டோர்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் வருமானம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

லகம் முழுக்க அதிக மக்களால் பயன்படுத்தப்படும் போன்களில் ஆப்பிள் ஐ போனும் போனும் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் மாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலத்தை இழந்து வரும் நிலையில் சீனாவிற்கும் - அமெரிக்காவின் ஆப்பிள் பொன்னுக்கும் இடையில் உலகம் முழுக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

What is the salary of the employess working at the Apple I Phone stores in India?

இதில் இந்தியாவின் மார்க்கெட்டை பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கான பல அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. இந்தியாவில் இதற்கு முன் ஆப்பிள் போன்கள் நேரடியாக விற்கப்பட்டது இல்லை. ஆப்பிள் நிறுவனத்தின் டீலர்கள் வழியாகவே இந்தியாவில் ஆப்பிள் போன் மற்றும் அதன் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் முதல்முறையாக மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. இந்த ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார்.

இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கலந்து கொண்டார். டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டிங்களை பார்வையிட்டார்.

What is the salary of the employess working at the Apple I Phone stores in India?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தார். அதேபோல் மும்பையில் முதல் ஸ்டாரை திறந்த போது அங்கே இருந்த பல்வேறு பாலிவுட் பிரபலங்களையும் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சந்தித்தார்.

சம்பளம் என்ன? இந்த நிலையில் மும்பை மற்றும் டெல்லியில் திறக்கப்பட்டு உள்ள நேரடி ஆப்பிள் ஸ்டோர்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் வருமானம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி இவர்களுக்கு நேரடியாக 1 - 1.50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது ஸ்டோர்களில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் மட்டும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். மேனேஜர்கள் இதை விட அதிகம் வாங்குகிறார்கள்.

மும்பையில் சில ஊழியர்கள் நேரடியாக அமெரிக்காவில் இருந்து மாற்றல் வாங்கி வந்தவர்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த சம்பளம் மொத்தமும் போன் விற்பதற்காக வழங்கப்படும் சம்பளம்தான்.

அங்கே வேலை வாய்ப்பு தற்போது இருப்பதாகவும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதுவரை அங்கே பணியில் எடுத்தவர்கள் பெரும்பாலும் பிஎஸ்சி, எம்எஸ்டி, எம்பிஏ படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிலர் பி டெக் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக போன் நிறுவனங்களில் விற்பனை பிரதிநிதிகளுக்கு 30 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் இங்கே இருக்கும் ஊழியர்களுக்கு ஒன்றரை லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

பிரம்மாண்டம்: சமீபத்தில்தான் மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன. இவை இரண்டு மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளன. எதிர்பார்க்காத அளவிற்கு வசதிகளுடன் இந்த ஸ்டோர்கள் கட்டப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+