5 டூப்ளிகேட்களை இறக்கியும் ஓபிஎஸ் அபாரம்! சாதித்த விஜய பிரபாகரன்! 12 விஐபி தொகுதியின் நிலவரம் என்ன?
சென்னை: தந்தி டிவியின் கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள 11 நட்சத்திர தொகுதிகளில் என்ன நிலவரம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

திமுக கூட்டணி சார்பில் திமுக 22 இடங்களிலும் (கொமதேக -1) காங்கிரஸ் 9 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பாஜக கூட்டணி சார்பில் பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகள் 12 உள்ளன. அவற்றில் தென் சென்னை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, தென்காசி, விருதுநகர், நீலகிரி ஆகிய தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.
தென் சென்னை: திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோர் மீண்டும் போட்டியிட்டனர். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் வேட்பாளராக களம் கண்டார்.
சிதம்பரம் : இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, அதிமுக சார்பில் சந்திரஹாசன் போட்டியிட்டனர்.
வேலூர் : இங்கு திமுக சார்பில் கதிர் ஆனந்த், பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் பசுபதியும் போட்டியிட்டனர்.
ராமநாதபுரம்: இங்கு சுயேச்சையாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் களம் காண்கிறார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஐயூஎம்எல் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெய் பெருமாள் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேனி: தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வன், அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன் ஆகியோர் போட்டியிட்டனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், அஇஅதிமுக சார்பில் பசிலியன் நசரத் ஆகியோரும் போட்டியிட்டனர்.
கோவை: கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, திமுக சார்பில் கணபதி ராஜ்குார், அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தருமபுரி: தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி, திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் ஆர்.அசோகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தென்காசி: இந்த தொகுதியில் பாஜக சார்பில் ஜான் பாண்டியன், அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர்.
நீலகிரி: திமுக சார்பில் ஆ.ராசாவும் அஇஅதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச் செல்வன், பாஜக சார்பில் எல் முருகன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
விருதுநகர்: இங்கு அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் விஜய பிரபாகரனும் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இந்த 12 விஐபி தொகுதிகளின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டிருந்தது. அதன் படி
கோவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 31.5 சதவீதம், அ.தி.மு.க 31 சதவீதம், பா.ஜ.க 30.5 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 35 சதவீதம், புதிய நீதி கட்சி 33 சதவீதம், அ.தி.மு.க 22 சதவீதம், பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணி காங்கிரஸ் 40 சதவீதம், பாஜக 34, சதவீதம், அதிமுக 16 சதவீதம்.
தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 37 சதவீதம், அதிமுக கூட்டணி புதிய தமிழகம் 31 சதவீதம், தமகா 22 சதவீதம்
தருமபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 44 சதவீதம், பாமகவுக்கு 32 சதவீதம், அதிமுக கூட்டணிக்கு 26 சதவீதம்.
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 44 சதவீதம், அதிமுக கூட்டணிக்கு 29 சதவீதம், தமகா 13 சதவீதம்
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் ஐயூஎம்.எல் 35 சதவீதம், சுயேச்சை ஒ.பி.எஸ் 33, அதிமுக 22 சதவீதம்
விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு, 36 சதவீதம், தேமுதிக 27 சதவீதம், பாமக 21 சதவீதம்
நீலகிரி தொகுதியில் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு, 36 சதவீதம், அதிமுக 31 சதவீதம், பாஜக 24 சதவீதம்
சிதம்பரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க 45 சதவீதம், அ.தி.மு.க 27, பா.ஜ.க 19 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னை தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 37 சதவீதம், அ.தி.மு.க 30 சதவீதம், பா.ஜ.க 24 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணிகே உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன்படி, தி.மு.க 35 சதவீதம், அ.ம.மு.க 30 சதவீதம், அ.தி.மு.க 21 சதவீதம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications