Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு! எப்போது வீடு திரும்புவார்.. மா. சு பகிர்ந்த மிக முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காலையில் அவருக்கு சில சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73 வயதிலும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

rajinikanth ma subramanian cinema

ரஜினி: விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில், அவர் 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார். இதற்கிடையே நேற்றிரவு அவர் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலியால் அவர் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. மேலும், காலையில் அவருக்கு முக்கிய மருத்துவச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது.

அதன்படி அவருக்கு இன்று காலை முக்கியமான சிகிச்சை நடந்து முடிந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிகிச்சை மிகத் துல்லியமாக நடந்து முடிந்ததாகவும் இப்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் தனது குடும்பத்தினரிடமும் பேசியதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

அமைச்சர் மா.சு: இது ஒரு பக்கம் இருக்க ரஜினியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. இதற்கிடையே ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் வழக்கமான மருத்துவ சோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு, "ரஜினிகாந்த் உடல்நிலை சீராகவே உள்ளது. அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றுள்ளார். இந்த சோதனைக்குக் காலையில் தான் சென்றிருக்க வேண்டும். காலை வெறும் வயிற்றுடன் சென்றிருக்க வேண்டும். அதிகாலை செல்வது சிரமமாக இருக்கும் என்பதாலேயே அவர் நேற்றிரவே சென்று அட்மிட் ஆகியிருக்கிறார்.

எப்போது டிஸ்சார்ஜ்: அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் வீடு திரும்புவார். இது வழக்கமான மருத்துவ சோதனை தான். நாமே எதுவும் நினைத்துக் கொள்ளத் தேவையில்லை. இப்போது கூட கேட்டுவிட்டே வந்தேன். அவர் நலமாகவே இருக்கிறார்.

தமிழகத்தின் முக்கிய பிரபலம் என்பதால் அவர் அட்மிட் ஆன தகவல் கிடைத்த உடனேயே இது குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டோம். காலையிலும் அவரது பரிசோதனை குறித்துக் கேட்டறிந்தோம். காலையில் வெறும் வயிற்றுடன் வரச் சிரமமாக இருக்கும் என்பதாலேயே இரவு வந்துள்ளார். வழக்கமான பரிசோதனை தான்.. அவர் நலமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+