"சர்ப்ரைஸ் பேக்கேஜ்".. சிஎஸ்கேவில் சாட்டையை சுழற்றும் தோனி? உள்ளே வரப்போகும் மாற்றம்.. ட்விஸ்ட்
சென்னை: ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற பின் சிஎஸ்கே அணியின் ஆடும் 11ல் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தோனி சில சர்ப்ரைஸ்களை இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
2023 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கியமான திட்டம் . தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.

அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். சிஎஸ்கே அணியும் இன்னும் மீதம் உள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
2023 ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை பதிவு செய்து வந்த சிஎஸ்கே அணி தற்போது மீண்டும் வெற்றியை பதிவு செய்ய தொடங்கி உள்ளது.
இதுவரை 11 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது. இந்த நிலையில் கடைசியாக பஞ்சாப் அணியிடம் எதிர்பாராமல் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.
6 அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே அணி வென்ற நிலையில் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே புனே அணிக்கு எதிராக டிரா ஆனது. இந்த நிலையில் மும்பைக்கு எதிரான கடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது.

ஆடும் 11: ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற பின் சிஎஸ்கே அணியின் ஆடும் 11ல் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தோனி சில சர்ப்ரைஸ்களை இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் அணிக்குள் பென் ஸ்டோக்ஸ் வரும் போட்டிகளில் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக அவே மைதானங்களில் நடக்கும் போட்டிகளில் பேட்டிங் சமயத்தில் பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதன்படி சிஎஸ்கேவின் டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் சிறப்பாக ஆடி வருகிறார். கான்வே பார்மில் இருக்கிறார். ரஹானே சர்ப்ரைஸ் எண்ட்ரியாக வந்து அதிரடி காட்டிக்கொண்டு இருக்கிறார்.
துபே சிஎஸ்கே மிடில் ஆர்டருக்கு புதிய பலம் கொடுத்து உள்ளார். மொயின் விரைவில் பார்மிற்கு வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மற்றும் எம்.எஸ். தோனி என்ற டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல் ஜடேஜாவும் காயம் எதுவும் இல்லாத காரணத்தால் தொடர்ந்து ஆடுவார்.
பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.
ஆனால் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரின் பேட்டிங் பார்மில் இல்லை. பவுலிங்கும் பெரிய பார்மில் இல்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் சாண்ட்னர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
இன்னொரு பக்கம் தீக்சனாவிற்கு பதிலாக பேட்டிங்கின் போது மட்டும் இம்பாக்ட் வீரராக பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி வாய்ப்பு உள்ளது. கஷ்டமான நேரங்களில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக அவரை தோனி களமிறக்குவார் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக அவே போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications