மோசமாகும் நிலைமை.. கட்டுப்படுத்த முடியாத வெங்காய விலை.. தமிழ்நாட்டில் இன்று காய்கறிகள் விலை என்ன?
சென்னை: கடந்த 2 வாரமாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளது. . மகாராஷ்டிராவில் பருவமழை தாமதம், தேவை அதிகரிப்பு மற்றும் காலதாமதம் காரணமாக வெங்காயத்தின் விலை தமிழ்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ₹50ல் இருந்து தற்போது ₹90 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து சீரான ஏற்றுமதிகள் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து வர வேண்டிய ஒரு பகுதி இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இன்றி சிக்கலில் மாட்டி உள்ளனர்.

மேலும் மழை பெய்து வருவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் எச்சரித்து உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான்
இன்றைய காய்கறி விலை நிலவரம்:
பெங்களூர் தக்காளி 1 கிலோ ₹ 70.00
பீன்ஸ் 1 கிலோ ₹ 68.00
பீட்ரூட் 1 கிலோ ₹ 45.00
பாகற்காய் 1 கிலோ ₹ 80.00
சுரைக்காய் 1 கிலோ ₹ 35.00
கத்தரி 1 கிலோ ₹ 40.00
அகன்ற பீன்ஸ் 1 கிலோ ₹ 100.00
முட்டைக்கோஸ் 1 கிலோ ₹ 20.00
கேப்சிகம் 1 கிலோ ₹ 60.00
கேரட் 1 கிலோ ₹ 90.00
காலிஃபிளவர் 1 துண்டு ₹ 25.00
சாயோட் 1 கிலோ ₹ 30.00
கொலோகாசியா 1 கிலோ ₹ 75.00
கொத்தமல்லி இலைகள் 1
கொத்து ₹ 20.00
வெள்ளரி 1 கிலோ ₹ 30.00
முருங்கை 1 கிலோ ₹ 60.00
இஞ்சி 1 கிலோ ₹ 210.00
பச்சை மிளகாய் 1 கிலோ ₹ 40.00
பச்சை வாழைப்பழம் 1 துண்டு ₹ 16.00
அவரை 1 கிலோ ₹ 60.00
புதினா 1 கொத்து ₹ 70.00
வெங்காயம் (பெரியது) 1 கிலோ ₹ 80.00
வெங்காயம் (சிறியது) 1 கிலோ ₹ 100.00
வாழைப்பூ 1 கிலோ ₹ 30.00
வாழைத்தண்டு 1 துண்டு ₹ 30.00
உருளைக்கிழங்கு 1 கிலோ ₹ 50.00
பூசணி 1 கிலோ ₹ 50.00
முள்ளங்கி 1 கிலோ ₹ 50.00
முருங்கைப்பூ 1 கிலோ ₹ 50.00
ஸ்கார்லெட் பூசணி 1 கிலோ ₹ 50.00
புடலங்காய் 1 கிலோ ₹ 30.00
உருளைக்கிழங்கு 1 கிலோ ₹ 110.00
மழை: மழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் வெங்காய விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. காற்றழுத்த தாழ்வு காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications