Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ஆண்டுக்கு பின்.. சென்னையில் வாகனங்களின் வேக வரம்பை மாற்றம் செய்தது ஏன்? மீறினால் என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே அந்தந்த வாகனங்கள் செல்ல வேண்டும். இதனை மீறினால் என்ன நடக்கும்? என்பதும், சென்னையில் வாகனங்களின் வேக வரம்பு என்பது எப்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஆண்டுதோறும் மக்கள்தொகை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

What is the Vehicle speed in chennai from november 4? what will happen if people break the rule? details here

குறிப்பாக விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் தான் சென்னையில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான வேக வரம்பு புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் 4ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

வாகனங்களின் வேகம்: இந்த புதிய வேக கட்டுப்பாட்டு விதிமுறையின்படி சென்னையில் இலகுரக வாகனங்கள் 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். மாறாக இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 50 கிமீட்டர் வேகத்திலும், ஆட்டோக்கள் அதிகபட்சமாக 40 கிமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். அதோடு குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் இன்று அறிவித்துள்ளனர்.

மீறினால் என்னவாகும்: இதனால் இனி மக்கள் மேற்கூறிய வாகனங்களில் சென்னையில் பயணம் செய்யும்போது குறிப்பிட்ட அந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டுள்ள வேக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே சென்னையில் 40 கிமீ வேகத்தை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்திகள் பரவியது. ஆனால் இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில் வரும் 4ம் தேதி முதல் இந்த வேக கட்டுப்பாடு நடைமுறை அமலுக்கு வருவது உறுதியாகி உள்ளது.

20 ஆண்டுக்கு பின்: மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2003ல் சென்னையில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் என்பது நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது பகல் வேளையில் ஆட்டோக்கள் 25 கிமீ, கனரக வாகனங்கள் 35 கிமீ, இருசக்கர வாகனங்கள் 50 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காரணம் என்ன: சென்னையை பொறுத்தமட்டில் தற்போது 63.5 லட்சம் வாகனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது சாலைகளில் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை கட்டமைப்புகளை பொறுத்தும், விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும் வாகனங்களின் வேகங்கள் என்பது மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி தான் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் வாகனங்களின் வேகம் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேகம் நிர்ணயித்தது எப்படி: வாகனங்களின் இந்த வேகத்தை நிர்ணயம் செய்வதற்காக தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் இதற்கு முன்பே 6 பேர் கொண்ட குழுவை அமைத்து இருந்தார். இந்த குழு மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு செய்தன. அதோடு ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்டவர்களுடன் உதவியுடன் சென்னையில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இந்த குழு தயாரித்த அறிக்கை சென்னை போக்குவரத்து போலீஸ் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த புதிய வேக கட்டுப்பாடு என்பது வரும் 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+