வீடியோவை பார்த்து.. கோபத்தின் உச்சிக்கே போன எடப்பாடி! குலுங்கிய வீடு! பாஜக கூட்டணியை உடைத்த பின்னணி
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி நேற்று முறிந்தது. இந்த கூட்டணி முறிவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி பார்த்த வீடியோ ஒன்றுதான் முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது.

அதிமுக பாஜக இடையே தற்போது உச்சம் அடைந்து உள்ளது. தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வீடியோ: அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக கால் செய்து எடப்பாடியிடம் பேசி உள்ளனர். அதில்.. நீங்கள் தானே பொதுச்செயலாளர் . நீங்கள் தானே மூத்த தலைவர். அவர் என்ன உங்களை பற்றியே இப்படி பேசுகிறார். இதெல்லாம் சரியா. சின்ன பையன் நம்மை கேள்வி கேட்கிறார், மோசமாக பேசுகிறார்.
அவருடன் கூட்டணி வைக்க வேண்டுமா? டெல்லியும் இதை கண்டிக்கவில்லையே? டெல்லியின் முழு சப்போர்டில்தான் இதெல்லாம் நடக்கிறதா? என்று கேள்வி கேட்டுள்ளனர். இதை அடுத்தே.. அண்ணாமலையின் முழு பேச்சு வீடியோவை அனுப்புங்கள். அதை பார்ப்போம் என்று எடப்பாடி கேட்டுள்ளார்.

இதையடுத்து அண்ணாமலையின் வீடியோவை எடப்பாடிக்கு அனுப்பி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்து எடப்பாடி கோபத்தின் உச்சிக்கே போய் உள்ளார். நெடுஞ்சாலை வீட்டில் இருந்து வீடியோவை பார்த்த அவர்.. கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
இதற்காக கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுக்கு போன் செய்து.. ஆலோசனை செய்துவிட்டு அதன்பின் கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். அண்ணாமலையின் பேச்சு, அதில் அவர் சொன்ன வார்த்தைகள் , அவர் பேசிய தொனி இவைதான் எடப்பாடி பழனிசாமியின் கோபத்திற்கு காரணம் என்கிறார்கள்.
இனி அண்ணாமலை இறங்கி வரும் வரை இந்த கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications