அதிமுகவை கூல் செய்ய என்ன வழி? கூட்டணியை ஒருங்கிணைக்க தனி ஒருங்கிணைப்பாளர்? பாஜக மேலிடம் யோசனை?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்தாலும் கூட, இன்னும் அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியோ, ஜே.பி.நட்டாவோ அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை.
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயக்குமார் பிரஸ்மீட்டுக்கு பிறகும் கூட, அதிமுக கூட்டணியில் தொடரவே பாஜக தேசியத் தலைமை விரும்புகிறது. இதனால் தான் திருப்பதி நாராயணன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது என நேற்றிரவு பேச வைத்திருக்கிறது.

இதனிடையே அண்ணாமலையிடம் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும், நேற்றைய முன் தினம் அண்ணாமலை பேசிய பேச்சையும் தம்பிதுரை எம்.பி. மூலம் பாஜக மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டது அதிமுக தலைமை. இதேபோல் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் ஏற்கனவே அனுப்பிய பிராதுகளும் இப்போது கவனம் பெற்றுள்ளன.
கடந்த முறையை போலவே இப்போதும் அதிமுகவை கூல் செய்து ஆஃப் செய்வதற்கான நடவடிக்கைகளை பாஜக மேலிடம் தொடங்கிவிட்டது. அண்ணமலைக்கு பதில் கூட்டணியை ஒருங்கிணைக்க புதிதாக ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்வது பற்றியும் யோசிக்க ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகினால் அது கட்சிக்கு பெரும் பின்னடைவை தரும் எனக் கருதுகிறது பாஜக மேலிடம். ஆனால் அண்ணாமலையை பொறுத்தவரை வெற்றியோ, தோல்வியோ அதிமுக மீது குதிரை சவாரி செய்ய விரும்பவில்லை. இதனிடையே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications