உதயநிதி படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோவை பதிவிட்ட வலதுசாரிகள்! அதுக்கு அவரே தந்த பதில் இருக்கே
சென்னை: சனாதன பேச்சு குறித்த சர்ச்சையில் உதயநிதி படத்தைச் செருப்பால் அடித்து சிலர் வீடியோ பகிர்ந்த நிலையில், அதற்கு அவரே நக்கல் பதிலைக் கொடுத்துள்ளார்.
கடந்த செப். 1ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் & கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உதயநிதி பேசிய பேச்சு தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, "தலைப்பிலேயே இந்த மாநாடு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் சரியாக 'சனாதன ஒழிப்பு மாநாடு' எனப் போட்டுள்ளீர்கள்..
உதயநிதி பேச்சு: நாம் சில விஷயங்களை ஒழித்தே ஆக வேண்டும்.. எதிர்ப்பதுடன் நிறுத்த முடியாது.. உதாரணமாகக் கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும். அதுபோல தான் இந்த சனாதனமும் என்று சொல்லலாம். சனாதனத்தை எதிர்ப்பதோடு நாம் நிறுத்திவிடக் கூடாது.. அதை நாம் ஒழித்தே ஆக வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்" என்று அவர் தெரிவித்தார்.
உதயநிதியின் இந்தப் பேச்சு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக இதற்கு பாஜகவில் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக தேசிய ஐடி விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, நாட்டில் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80% மக்களை ஒழிக்க உதயநிதி அழைப்பு விடுத்தார் என்பது போலப் பதிவிட்டார். அதன் பிறகே நெட்டிசன்கள் உதயநிதி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.
எதிர்ப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜகவின் அஸ்வத்தாமன் என்பவரும் உதயநிதி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் வினீத் ஜிண்டால் என்பவர் போலீசாரிடம் உதயநிதி மீது புகார் அளித்தார். இப்படி உதயநிதி பேச்சுக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ் ஆச்சார்யா என்ற சாமியார் சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய உதயநிதி தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் தருவோம் என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இருப்பினும், உதயநிதி தனது கருத்தில் உறுதியாகவே இருக்கிறார். எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவே உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.
😂
— Udhay (@Udhaystalin) September 10, 2023
போராட்டம்: நாட்டில் ஆங்காங்கே உதயநிதிக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்படியொரு போராட்டத்தின் வீடியோவை பகவ கிராந்தி சேனாவின் தேசிய தலைவர் பிராச்சி சாத்வி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் உதயநிதி போட்டோவை செருப்பால் அடிப்பது போல இருந்தது. இந்த வீடியோவுக்கு உதயநிதி பதிலும் அளித்துள்ளார். எந்தவொரு வார்த்தையும் சொல்லாமல் நக்கலாகச் சிரிப்பது போன்ற ஸ்மைலியை அவர் பதிவிட்டுள்ளார்.
😂
— Udhay (@Udhaystalin) September 10, 2023
நக்கல் பதில்: அதேபோல மற்றொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அதில் ஏதோ ஒரு இடத்தில் வாசலில் உதயநிதியின் போட்டோ வைத்து, உள்ளே வருபவர்களும் வெளியே செல்பவர்களும் அதை மிதித்துவிட்டுப் போவது போல இருக்கிறது. அந்த வீடியோவை ஒருவர் பகிர்ந்த நிலையில், கீழே ஒருவர் உதயநிதி படத்தைக் கொண்ட டோர்மேட்டை ஆர்டர் செய்வதாகப் படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில் உதயநிதியை யாரோ டேக் செய்ய, அவர் நக்கலாக போஸ் கொடுக்கும் ஒரு பழைய போட்டோவை பதிலாக அளித்துள்ளார். தன்னை எதிர்த்து போராட்டம் நடத்தியோருக்கு உதயநிதி நறுக் பதிலைக் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இதனை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications