14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்? ஸ்டாலினின் முக்கிய முடிவு.. உதயநிதி என்ன இப்படி சொல்றாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக செய்திகள் பரவி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தற்போது எம்எல்ஏ பணிகளில் மிகவும் பிசியாக இருக்கிறார். அதேபோல் சினிமாவிலும் தீவிரமாக நடிப்பு, தயாரிப்பு, ரிலீஸ் ஆகிய பணிகளை செய்து வருகிறார்.

இவரின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தீவிரமாக பல்வேறு படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. இதன் ப்ரமோஷன் பணிகளிலும் கூட உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

சினிமா

சினிமா

இது போக மாமன்னன், கண்ணை நம்பாதே போன்ற படங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் எம்எல்ஏ உதயநிதி அமைச்சராக போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது காய்ச்சலும், முதுகுவலி பிரச்சனையும் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் உதயநிதியை அமைச்சரவை உள்ளே கொண்டு வர ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை அரசு பணிகளில் ஈடுபடுத்த முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக கூறப்படுகிறது.

முதலீடு

முதலீடு

அதேபோல் முதலீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் சமயங்களில் தமிழ்நாட்டில் பணிகளை கவனிக்கவும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அவரை இப்போதே அமைச்சராக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஸ்டாலின் அப்செட்டில் இருக்கும் சீனியர், ஜூனியர் உட்பட 7 அமைச்சர்களில் சிலரின் துறையை பறிக்கலாம். சிலரை துறையை மாற்றலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்கான பட்டியல் தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

என்ன துறை?

என்ன துறை?

அதன்படி உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிற்கு விளையாட்டுத்துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடங்கி பல பணிகளில் நேரடியாக கவனம் செலுத்தினார். அமைச்சர் மெய்யநாதன் உடன் நெருக்கமாக இருக்கிறார். தமிழ்நாடு அரசும் விளையாட்டு துறை மீது கவனம் செலுத்தி வருகிறது. திருச்சியில் பெரிய ஸ்போர்ட்ஸ் சிட்டி ஒன்றை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டு தொடர்களை நடத்த தமிழ்நாடு அரசு முயன்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் போஸ்டிங் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 அமைச்சரவை பதவி

அமைச்சரவை பதவி

இந்த நிலையில் அமைச்சரவை பதவி உங்களுக்கு வழங்கப்படுமா? அமைச்சரவையில் உங்களுக்கு இடம் கிடைக்குமா என்று செய்தியாளர்கள் இன்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், அமைச்சர் பதவி குறித்து நான் முடிவு எடுக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின்தான் அதில் முடிவு எடுக்க வேண்டும், என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பே அமைச்சரவை பற்றிய பேச்சுக்கள் வந்த போது, அதில் முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு எடுப்பார். முதல்வர் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன். அமைச்சரவை பொறுப்பை ஏற்க தயார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் கோரிக்கை

அமைச்சர்கள் கோரிக்கை

உதயநிதியை அமைச்சராக்கி விடுங்கள் என ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர்கள் சிலரும், நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகிறார்களாம். அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி பல அமைச்சர்கள் இதில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தனர். இதனையடுத்தே, 14-ந்தேதி உதயநிதி அமைச்சராகிறார் என செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இன்றைய தினம் வரை (11/12/22) ராஜ்பவனுக்கு (கவர்னர் மாளிகை) அரசு தரப்பிலிருந்து தகவல் போகவில்லை. பெரும்பாலும் இரண்டு தினங்களில் இது தொடர்பாக ஆளுநர் தரப்பிற்கு தகவல் தெரிவிக்கப்படலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+