"கப்பு முக்கியம் பிகிலு!" 2026 தான் டார்கெட்.. முன்பே சொன்ன விஜய்! அந்த இன்னொரு மேட்டர் நினைவிருக்கா
சென்னை: நடிகர் விஜய் இப்போது புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவர் தனது இலக்கு என்ன என்பதை ஏற்கனவே தெளிவாகக் கூறியிருக்கிறார். குறிப்பாக லியோ வெற்றி விழாவில் அவரது பேச்சு எப்படி இருந்தது என்பதை ரிவைண்டாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் என்றால் அது விஜய்.. அவரது ஒவ்வொரு திரைப்படமும் வசூலில் புது புது சாதனைகளைப் படைத்து வருகிறது. சினிமா மட்டுமின்றி அரசியலுக்கும் விஜய் வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த காலங்களில் அவரது பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளைப் பார்த்தால் இது தெளிவாகவே புரியும்.
நடிகர் விஜய்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரடியாகப் போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவது இது முதல்முறை இல்லை என்ற போதிலும் விஜய் படத்தையும், விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்தவும் அனுமதி தரப்பட்டது பேசுபொருளானது. இந்தச் சூழலில் தான் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்றும் அதில் யாருக்கும் ஆதரவும் இல்லை என்பதை அறிவித்துள்ளார். அதேநேரம் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது முதல் டார்கெட் தமிழ்நாடு சட்டசபை தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரம் விஜய் அறிவிப்பில் சர்ப்ரைஸ் எதுவும் இல்லை.
சூசகம்: ஏனென்றால் லியோ வெற்றி விழாவிலேயே இது குறித்து அவர் சூசகமாகக் கூறியிருந்தார். அதாவது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் லியோ.. இந்தப் படம் வெற்றியைக் கொண்டாடச் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதுதான் விஜய் மறைமுகமாகத் தனது வருங்கால திட்டம் குறித்துத் தெரிவித்து இருந்தார்.
பிளான் இதுதான்: அதே நிகழ்ச்சியில் 2026 சட்டசபைத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சொன்ன பதில் தான் முக்கியம்.. அந்த வருடம் கால்பந்து போட்டி நடக்க உள்ளதாகத் தெரிவித்த விஜய், "கப்பு முக்கியம் பிகிலு.. அதை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று கூறியிருப்பார்.
இன்னொரு பதில்: அந்த விழாவில் பேசிய விஜய், "புரட்சித் தலைவர் என்றால் ஒருத்தர் தான்... நடிகர் திலகம் என்றால் ஒருத்தர் தான்.. கேப்டன் என்றால் ஒருத்தர் தான்.. உலக நாயகன் என்றால் ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான்... தல என்றால் ஒருத்தர் தான்..
அதேபோல தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதைச் செய்வார்கள். அரசருக்குக் கீழ் இருப்பவர். எனக்கு மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதைச் செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதைச் செய்து விட்டுப் போகிறேன்" என்று கூறியிருப்பார்.
இது அப்போதே மிகப் பெரியளவில் டிரெண்டானது. அவரது பிளான் என்புத 2026 சட்டசபைத் தேர்தலை நோக்கித் தான் இருக்கிறது என்பது அதில் உறுதியானது. அப்போது விஜய் தரப்பில் இருந்தே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications