Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெக் உலகை திரும்பி பார்க்க வைத்த ஆப்பிள் "விஷன் ப்ரோ".. என்னங்க இது? எப்படி இயங்கும்? இதை படிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட விஷன் ப்ரோ கண்ணாடி பற்றிய அறிவிப்பு டெக் உலகில் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன விஷன் ப்ரோ.. என்ன கண்ணாடி இது? எப்படி இயங்கும்? என்று கேட்பவர்களுக்குத்தான் இந்த செய்தி!

"இன்றைய நாள்.. கணினி உலகில் புதிய சகாப்தம் தொடங்க போகிறது" என்று சொல்லிவிட்டு ஆப்பிள் நிறுவன சிஇஓ நேற்று ஆப்பிள் வருடாந்திர கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புதான் Apple Vision Pro! ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக புதிய படைகளை வெளியிடாத நிலையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய டெக்னலாஜிதான் ஆப்பிள் விஷன் ப்ரோ.

இது ஒரு விஆர் கண்ணாடி கிடையாது. இது ஏஆர் கண்ணாடி. முதலில் விஆர் - ஏஆர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். விஆர் என்பது.. விர்ச்சுவல் ரியாலிட்டி. அதாவது அந்த கண்ணாடியை அணிந்தால் அதில் உள்ளே நாம் பார்க்கும் விஷயங்கள் எல்லாம் கற்பனை.. உதாரணமாக படம், கேம் போன்ற விஷயங்களை பார்க்கலாம்.

What is Vision Pro? What is the use of this new Apple spectacular spectacles?: All you need to know

கேம் ஆடுவது என்றால் ஆடலாம். விஆர் கண்ணாடிகள் கடந்த 5-6 வருடங்களாகவே பிரபலமாக இருக்கின்றன. ஆனால் ஏஆர் கண்ணாடிகள் என்பது வேறு. இது augumented reality கண்ணாடிகள். அதாவது கண்ணாடி உள்ளே காணப்பது கற்பனை அல்ல. அது நிஜம். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் செயலிகளை பயன்படுத்துவதற்கு பதில் கண்ணாடியை அணிந்தால் போதும் அதை வைத்தே பணிகள் அணைத்தும் முடியும்.

கண்ணாடி பயன்: இந்த கண்ணாடியின் பயன்களை கேட்டால் நீங்களே மயங்கிவிடுவீர்கள்.. கண்ணாடியை அணிந்து படம் பார்க்க முடியும்.. அதில் இருக்கும் செயலிகளை உங்கள் கண்ணாடி வழியாக இயக்க முடியும். அதாவது விஆர் கேமராவில் வெறுமனே வீடியோ மட்டுமே ஓடும். ஆனால் ஆப்பிளின் இந்த ஏஆர் கேமராவில் நீங்கள் உங்கள் கண்ணாடியை ஒரு ஸ்மார்ட் போன் போல பயன்படுத்த முடியும். அல்லது ஸ்மார்ட் கணினி போல பயன்படுத்த முடியும். வாலி இதை கேட்டு இருந்தால்.. கண்ணில் ஒரு கணினி என்று கூட பாட்டு எழுதி இருப்பார்!

உதாரணமாக நீங்கள் படம் பார்க்க நெட்பிளிக்சை இந்த கண்ணாடியில் திறந்து பார்க்க முடியும். இதை செய்வது எளிது.. கண்ணாடியை அணிந்த பின் அதில் மெனு காட்டும்.. அதில் நீங்கள் நெட்பிளிக்சை தேர்வு செய்யலாம்.. அல்லது உங்கள் குரலில் open netflix என்று கூறலாம்.. கண்ணாடி அணிந்து இருக்கும் போது உங்கள் கையை தூக்கி நீங்கள் இங்கும் அங்கும் நகர்த்தினால் கண்ணாடியில் உள்ள மெனுக்கள் நகரும்.

What is Vision Pro? What is the use of this new Apple spectacular spectacles?: All you need to know

அதன்பின் நீங்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டும் கூட படம் பார்க்கலாம். ஸ்கிரீன் தேவை இல்லை. உங்கள் அறைக்கு ஏற்றபடி அதுவே கலர் மற்றும் வெளிச்சத்தை மாற்றிக்கொண்டு... உங்கள் அறைக்கு உள்ளேயே ஹோம் தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை இது கொடுக்கும்.

படம் மட்டுமா.. இதிலேயே வீடியோ கால் பேசலாம்.. பேஸ்புக்கில் குட் மார்னிங் மெசேஜ் போடலாம்.. ட்விட்டரில் டேக் டிரெண்ட் செய்யலாம்.. நீங்கள் செல்போன்.. கணினியில் செய்ய கூடிய அனைத்தையும் இந்த கண்ணாடி வழியே செய்யலாம். இதற்கு நீங்கள் உங்கள் கண் அசைவுகளை பயன்படுத்தி கட்டளை கொடுக்கலாம். அதாவது கண்களை நகர்த்தி ஒரு செயலியை நீண்ட நேரம் பார்த்து அதை தேர்வு செய்யலாம். அல்லது கையை இங்கும் அங்கும் நகர்த்தி பயன்படுத்தலாம். இல்லையென்றால் குரல் வழியாக கட்டளைகளை கொடுக்கலாம்.

What is Vision Pro? What is the use of this new Apple spectacular spectacles?: All you need to know

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு தனியாக ஸ்கிரீன் எதுவும் பயன்படுத்த தேவை இல்லை. நம்மை சுற்றி இருக்கும் பகுதிகளையே அது ஸ்கிரீனாக பயன்படுத்தும். உதாரணமாக நீங்கள் விமானத்தில் இதை அணிந்து.. உள்ளே ஒரு வீடியோ பார்க்கிறீர்கள் என்றால்.. அந்த வீடியோ காட்சி உங்களுக்கு முன் தோன்றும். கண்ணாடிக்கு வெளியே வீடியோ காட்சி தோன்றுவது போல உங்களுக்கு காட்சி அளிக்கும். ஆனால் வெளியே இருப்பவர்களுக்கு நீங்கள் வெறும் கண்ணாடி அணிந்து இருப்பது போல மட்டுமே தெரியும்.

இதை அப்படியே தற்போது இருக்கு ஏஐ ஜிபிடிகளுடன் சேர்த்து பயன்படுத்தும் போது.. நீங்கள் அப்படியே வாழும் டோனி ஸ்டார்க் போல மாறி விட முடியும். ஆமாங்க.. கண்ணாடியை அணிந்து கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.. எல்லா கொண்டாட்டங்களையும் அனுபவிக்க முடியும்.. படிக்க முடியும்.. அலுவலக மீட்டிங்குகளில் கலந்து கொள்ள முடியும். இந்த ஒற்றை கண்ணாடிக்கு உள்ளே இன்னொரு உலகமே உங்களுக்கு காட்சி அளிக்கும்.

எப்போதும்.. எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்யும் ஆப்பிள் நிறுவனம் இந்த கண்ணாடிக்கு வைத்து இருக்கும் பெயர் spatial computing.. கண்ணாடி பெயர் வாயில் நுழையவில்லை என்றால் பரவாயில்லை.. கண்ணாடி கண்ணில் நுழைந்தால் போதுமே!

கண்ணாடி எப்படி இருக்கும்?: பார்க்க குளிர் பிரதேசங்களில் பைக் ஓட்டும் நபர்கள் அணியும் கண்ணாடி போல இருக்கும் இதில் பின் பக்கம் ஒரே ஒரு வயர் இருக்கும். முன் பக்கம் கண்ணாடி டிரான்ஸ்பரண்ட் போல இருக்கும். கண்ணாடியை கட்டுவது போல பின் பக்கம் ஒரு பேண்ட் இருக்கும். அதை தலையோடு சேர்த்து கட்டிக்கொள்ள முடியும்.

விஷன் எப்படி? : இதில் ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு விஷன் பேனல் என்று இரண்டு இருக்கும். இதில் இரண்டு பக்கங்களிலும் 23 மில்லியன் பிக்சல் டிஸ்பிளே உள்ளது. இதில் உள்ள 3 டி லென்ஸ் வழியாக கண்ணாடியில் பார்க்கும் விஷயங்கள் கண்ணாடிக்கு வெளியே தெரிவது போன்ற காட்சி பிழையை ஏற்படுத்தும்.. காண்பதெல்லாம் காட்சிப்பிழைதான் என்று அப்பவே இதைத்தான் பாரதி கணித்திருப்பார் போல!

இதில் உள்ள ஐஆர் கேமரா.. உங்களின் கண் அசைவுகளை கணிக்கும். அதை வைத்தே நீங்கள் கண்கள் மூலம் கட்டளைகளை இடலாம்.. இது உங்கள் கண் அசைவிற்கு கட்டுப்படும் ஏஐ அடிமை பாஸ்.. வெளியே இருக்கும் சிறிய கேமரா மற்றும் சென்சார் உங்கள் கை அசைவை கணித்து கை அசைவிற்கு கட்டுப்படும். இதில் வெளியே உள்ள lidar sensors.. உங்களுக்கு வெளியே வெளிச்சம் எப்படி உள்ளது.. உங்களுக்கு வீடியோவையோ எப்படி காட்ட வேண்டும் என்பது போன்ற முடிவுகளை எடுக்கும்.

What is Vision Pro? What is the use of this new Apple spectacular spectacles?: All you need to know

ஆர் 1 சிப் : இதில் உள்ள ஆர் 1 சிப்தான்.. ஆப்பிளின் புதிய சம்பவம். இந்த சிப்தன சாதாரண போனில் இருந்து.. விஆர் கண்ணாடியில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டுகிறது. இந்த கண்ணாடி வேகமாக செயல்பட.. அனைத்து பணிகளையும் துரிதமாக செய்ய இந்த நேனோ சிப்தான் காரணம். இதை கண் இமை நொடியை விட 8 மடங்கு வேகம் என்கிறது ஆப்பிள்.

பேட்டரி இருக்காது? : இதில் கண்ணாடி உள்ளே பேட்டரி இருக்காது. கண்ணாடிக்கு பின்புறம் இருக்கும் வயர் பேட்டரி உடன் சேர்ந்து இருக்கும். அதை தனியாக எடுத்து சார்ஜ் செய்யலாம். அல்லது வயரை பிளக்கில் சொருகி.. சிட்டி ரோபோட் போல அமர்ந்து கொண்டு வீடியோ பார்க்கலாம்.. என்னதான் இருந்தாலும்.. இதில் உலகமே தெரிந்தாலும் சார்ஜ் என்னமோ 2 மணி நேரம்தான் இருக்கும்.. அதாவது ஹாலிவுட் படங்களை முழுதாக பார்க்கலாம்.. தமிழ் படங்களை பார்க்க இடையில் சார்ஜ் போட வேண்டி இருக்கும்.

ஓஎஸ் என்ன?: இதற்காக visionOS என்ற புத்தம் புதிய ஓஎஸ்சை உருவாக்கி உள்ளது ஆப்பிள் நிறுவனம். MacOS மற்றும் iOS அது போக கூடுதலாக சில புதிய பயன்கள், சென்சார்கள், ஏஐ, விஆர், ஏஆர் கோடுகள் மூலம் இந்த புதிய ஓஎஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.

விலை என்ன? : விஷன் ப்ரோ அடுத்த சில காலத்திற்கு கிடைக்காது. "அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது கிடைக்கும்" என்று ஆப்பிள் கூறுகிறது. இவ்வளவு வசதி இருந்தால் பைசாவும் அவ்வளவுஇருக்குமே .. அமெரிக்க டாலரில் இது $3,499 விலை. இதன் இந்திய விலை கிட்டத்தட்ட 3 லட்சம் வரும்.. அதாவது ஒரு கிட்னி விலை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+