தங்கம் தெரியும்.. அதென்ன "வெள்ளை" தங்கம்? இதுல கூட சீனா தான் முதலிடமாம்.. அடுத்தடுத்து சர்ப்ரைஸ்
சென்னை: தங்கம் என்றாலே மஞ்சள் நிறத்தில் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், வெள்ளை நிறத்திலும் கூட தங்கம் இருப்பது பலருக்கும் தெரியாது. இதை ஆங்கிலத்தில் ஒயிட் கோல்ட் என அழைக்கிறார்கள். அதென்ன ஒயிட் கோல்ட்.. இது எதற்குப் பயன்படும்.. சர்வதேச அளவில் வெள்ளைத் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் தேவையும் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் தங்கத்தைப் போட்டி போட்டுக் கொண்ட வாங்குகிறார்கள். இதனால் தங்கத்தின் விலையும் கூட தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. அப்படிப்பட்ட தங்கம் என்றாலே பலருக்கும் அதன் பளபளக்கும் மஞ்சள் நிறம் தான் நினைவுக்கு வரும். ஆனால், அதே தங்கத்தில் ஒயிட் கோல்ட் என ஒன்று இருப்பது குறித்துக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா!

அதென்ன வெள்ளைத் தங்கம்?
தூய தங்கத்தை பல்லேடியம், நிக்கல் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களுடன் கலக்கும்போது வெள்ளைத் தங்கம் உருவாக்கப்படுகிறது. இந்த உலோகக் கலவை வெள்ளைத் தங்கத்திற்குப் பிரகாசமான சில்வர் கலர் நிற பளபளப்பைக் கொடுக்கிறது. இது பார்க்கப் பிளாட்டினத்தை போலவே இருக்கும். அதேநேரம் விலை மலிவானதாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருக்கும். இதன் காரணமாகவே ஆபரணத் துறையில் வெள்ளைத் தங்கம் பிரபலமாக உள்ளது.
வழக்கமான தங்கத்தை உற்பத்தி செய்வதை விட இந்த வெள்ளைத் தங்கத்தைத் தயாரிப்பது ரொம்பவே கடினம்! வெள்ளைத் தங்கம் உற்பத்திக்குத் தரமான சுத்திகரிப்பு மற்றும் துல்லியமான உலோகக் கலவை அவசியம் என்பதால் இதை ஈஸியாக உற்பத்தி செய்ய முடியாது. இந்த மிக்ஸிங் சரியாகச் செய்தால் மட்டும் அது தூய்மையானதாகவும் வலிமையானதாகவும் இருக்கும்.
சீனா தான் முதலிடம்
இப்போது உலகளவில் பார்க்கும்போது சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் வெள்ளைத் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இந்த நாடுகள் பயன்படுத்தும் சுத்திகரிப்பு செயல்முறைகள் நீடித்து உழைக்கும், நேர்த்தியான ஒரு உலோகக் கலவைகளை உருவாக்குகின்றன. இவை உலகளவில் ஆபரணங்கள் மற்றும் தொழில்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
2025ஆம் ஆண்டில் சீனா சுமார் 380 மெட்ரிக் டன் தங்க உற்பத்தி இலக்குடன் உலகளாவிய தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. ஷான்டாங் மற்றும் உள் மங்கோலியா போன்ற மாகாணங்கள் தங்கம் பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. பின்னர் இது வெள்ளைத் தங்கம் கலவைகளாக மாற்றப்பட்டு உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அடுத்தடுத்த இடங்கள்
ரஷ்யா ஆண்டுக்குச் சுமார் 320 மெட்ரிக் டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. ரஷ்யாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் தங்கம் மற்றும் பல்லேடியம் உள்ளிட்ட பிற உலோகங்களைச் சேர்த்து வலுவான வெள்ளைத் தங்கத்தை உருவாக்குகிறது. சைபீரியாவில் இருந்து கிடைக்கும் தங்கம் ரஷ்யாவுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
அடுத்து ஆஸ்திரேலியா.. ஆண்டுக்குச் சுமார் 310 மெட்ரிக் டன் தங்கத்தை வெட்டி எடுக்கிறது. தெளிவான சுரங்க பிராசஸ் முறைக்கு ஆஸ்திரேலியா எப்போதும் பெயர் பெற்றது.. அத்துடன் உயர் தரமான வெள்ளைத் தங்கத்தை உருவாக்கும் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியா பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய வெள்ளைத் தங்கத்திற்குச் சர்வதேச அளவில் அதிகத் தேவை உள்ளது.
கனடா, அமெரிக்கா
கனடா சுமார் 200 மெட்ரிக் டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. தூய்மையான தங்கத்திற்கு கனடா முக்கியத்துவம் கொடுக்கிறது. கனடா உற்பத்தியாளர்கள் தூய்மையான சுத்திகரிப்பு முறைகள் மூலம் வெள்ளைத் தங்கத்தை உற்பத்தி செய்கிறார்கள். ஆடம்பர நகைத் தயாரிப்புகளில் தான் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒன்டாரியோ போன்ற சுரங்கப் பகுதிகள் முக்கியமானதாக உள்ளது.
அமெரிக்கா ஆண்டுக்குச் சுமார் 170 மெட்ரிக் டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக நிக்கல் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஏற்ற, பல்லேடியம் கலந்த ஹைபோஅலர்கெனிக் (hypoallergenic) வெள்ளைத் தங்கத்தை உருவாக்குவதில் அமெரிக்கா
டாப் இடத்தில் உள்ளன. தென்னாப்பிரிக்கா சுமார் 100 மெட்ரிக் டன் தங்கத்தை வெட்டி எடுக்கிறது. வளமான சுரங்க வரலாற்றைக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்காவும் கணிசமான அளவு வெள்ளைத் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. வெள்ளைத் தங்கத்தை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்ற நாடாக உள்ளது.
இதர நாடுகள்
அடுத்த இடத்தில் பெரு ஆண்டுக்குச் சுமார் 130 மெட்ரிக் டன் தங்கத்துடன் 8ஆவது இடத்தில் உள்ளது. மெக்சிகோ சுமார் 125 மெட்ரிக் டன் தங்கத்துடன் 9வது இடத்தில் இருக்கும் நிலையில், உஸ்பெகிஸ்தான் கிட்டத்தட்ட 120 மெட்ரிக் டன் தங்கத்துடன் 10வது இடத்தில் இருக்கிறது.
-
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்












Click it and Unblock the Notifications