திருமாவளவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதில் என்ன தவறு? கொந்தளித்த நடிகர் கூல் சுரேஷ்!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதில் என்ன தவறு இருக்கிறது என்று நடிகர் கூல் சுரேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார். சாதி பார்த்து பழகும் எண்ணம் தனக்கு கிடையாது என்று கூறிய நடிகர் கூல் சுரேஷ், பெரிய மனிதர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பங்கேற்றார். இதன்பின் திருமாவளவனை பார்த்த பின், உடனடியாக நேரில் சென்று மேடையிலேயே காலில் விழுந்து ஆசி பெற்றார். இதன்பின் நடிகர் கூல் சுரேஷ்-க்கு தனக்கு சால்வை அணிவித்ததை போல் அணிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

அப்போது திருமாவளவன் முன்பாகவே கூல் சுரேஷ்-க்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. இதனைத் தொடர்ந்து நடிகர் கூல் சுரேஷ் சிலர் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் நாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ரவி மரியா, நடிகர் மகாநதி சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சிக்கு திருமாவளவன் வந்த போது, அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்க வேண்டாம் என்று ஓரமாகவே நின்றிருந்தேன். ஆனால் அவர் நான் ஓரமாக நிற்பதை பார்த்துவிட்டார். அவர் ஒரு நல்ல அரசியல் தலைவர்.
அந்த நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்ததை போல் எனக்கு சால்வை அணிவிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமாவளவனின் காலில் விழுந்து ஆசி பெற்றதால், என்னை சிலர் ஷூ நக்கி, கால் நக்கி என்று விமர்சிக்கிறார்கள். எப்போதும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் பழக்கம் எனக்கு உண்டு.
திருமாவளவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதில் என்ன தவறு? யார், யார் என்ன சாதி என்று பார்த்து பழகும் பழக்கம் எனக்கு கிடையாது. என்னை பொறுத்தவரை மாம்பழகம், பானை, சூரியன் என்று அனைவரும் வேண்டும் என்று நினைப்பேன். இன்று நான் ஹீரோவாக இருப்பதற்கு பெரிய மனிதர்களின் ஆசிர்வாதமே காரணம். என் மீது சாதி முத்திரை குத்தாதீர்கள் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications