கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தினால் என்ன தவறு - உச்சநீதிமன்றம் கேள்வி
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், கோயில் நிதியை கல்விக்காகப் பயன்படுத்தினால் என்ன தவறு என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கோவில் நிலத்தில் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கல்லூரி கட்டடம் அமைப்பதற்கான அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்து சமய அறநியைத் துறை ஆணையரின் அறிவிப்பாணையை ரத்து செய்ய மறுத்தது. இதைத்தொடர்ந்து, கல்லூரி கட்டுவதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சோம்நாத் ஆலயம்
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதி விக்ரம் தலைமையிலான நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளத்துப் பேசிய ரமேஷ், தற்போது கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது கொளத்தூர் சோம்நாத் ஆலயத்தின் இடமாகும்.
கல்லூரிக்காக கோயில் நிதி
மேலும், கோயில் நிதியை கல்லூரிக்காக பயன்படுத்துகின்றனர். எனவே, கல்லூரி கட்டடம் கட்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சோம்நாத் ஆலயத்தின் இடத்தில் கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்திற்கான வாடகையாக 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை இந்து சமய அறநிலையத் துறையானது கோயிலுக்கு வழங்கி வருகிறது.
எதிர்காலம்
சம்மந்தப்பட்ட இடத்தை வாடகை இல்லாமல் இலவசமாக பயன்படுத்தவில்லை. கபாலீஸ்வரர் திருக்கோயிலின் சார்பில் தான் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. கல்விக்காகத்தான் இந்த இடத்தை பயன்படுத்துகிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள், மாணவர்களின் எதிர்காலத்துக்காக கல்லூரிக்கான கட்டமைப்பை தான் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்துகிறது.
என்ன தவறு?
கல்விக்காகத்தான் கோயில் நிதியைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, கல்விக்காக கட்டடம் அமைப்பதோ அல்லது நிதியை பயன்படுத்துவதிலோ என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்குப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications