புத்தாண்டு ரெசலூஷன் எப்படி இருக்கனும்? படத்தில் முதலில் என்ன தெரியுது.. சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்ட படத்தில், உங்கள் கண்ணுக்கு முதலில் கற்கள் தெரிகிறதா? நடைபாதை தெரிகிறதா? இதற்கு நீங்கள் சொல்லும் பதிலை வைத்து உங்க கேரக்டர் எப்படிப்பட்டது, இந்த புத்தாண்டில் நீங்கள் எந்த மாதிரியான தீர்மானங்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2023-க்கு விடை கொடுத்து விட்டு 2024 ல் அடியெடுத்து விட்டோம். புத்தாண்டு பிறந்ததுமே பலரும் ரெஷலூஷன் எடுப்பர்கள். முடிந்த வருடம் தான் பாடாய் படுத்தி விட்டது. பிறந்து இருக்கும் ஆண்டாவது அருமையான ஆண்டாக இருக்க வேண்டும் எனவும் நம்மிடம் இருக்கும் பலவீனத்தை விட்டுவிட்டு பலத்தை புரிந்து கொள்ள வேண்டும். உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானங்கள் எடுப்பார்கள். இப்படி தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பாக கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டு எடுத்தால் சரியான வழியில் தீர்மானங்களை எடுக்க உதவி கரமானதாக இருக்கும். உங்க கேரக்டர் எப்படின்னு ஓரளவு கணிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஓரளவு உதவியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.. அதை வைத்து உங்க கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிடலாம். இங்கே கொடுக்கப்பட்ட படத்தை உற்று கவனியுங்கள்.. உங்கள் கண்ணுக்கு முதலில் கற்கள் தெரிகிறதா, இல்லை உங்கள் கண்ணுக்கு முதலில் நடைபாதை தெரிகிறதா? இதற்கு நீங்கள் சொல்லும் பதிலை வைத்து உங்க கேரக்டர் எப்படிப்பட்டது, நீங்கள் எந்த மாதிரியான தீர்மானங்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
உங்கள் கண்ணுக்கு கற்கள் தெரிந்தால்:
சேலஞ்ச் ஆன சூழலை எதிர்கொண்டு நீங்கள் வந்து இருப்பீர்கள். பல ஏமாற்றங்களையும் எதிர்பாராத தடைகளையும் உங்கள் வாழ்க்கையில் வந்து சென்று இருக்கும். ஆனால், இதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளமால் பயணிக்கும் மனோபாவம் உங்களிடம் இருக்கும். நீங்க புத்தாண்டு தீர்மானம் எப்படி எடுக்க வெண்டும் என்றால், உங்கள் மீது முதலில் அக்கறை செலுத்த முன்வர வேண்டும்.
இலக்கை எக்காரணம் கொண்டு மாற்றக்கூடாது. இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும். அவநம்பிக்கையான சிந்தனைகளை ஒதுக்க வேண்டும் என்பவை போன்றவற்றை உங்கள் புத்தாண்டு தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ளலாம். அதோடு இல்லாமல் பிறந்திருக்கும் புத்தாண்டு உங்களுக்கு அருமையாக இருக்க வாழ்த்துக்கள்..
உங்கள் கண்ணுக்கு நடைபாதை தெரிந்தால்:
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் முதலில் உங்கள் கண்ணுக்கு நடைபாதை தெரிந்தால் உங்கள் கேரக்டர் கீழ்கண்டவாறு இருக்க அதிக வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கு அஞ்சாதவர்களாக இருப்பீர்கள். கடுமையான சூழலை கடந்து வந்து இருக்கலாம். ஆனால் இதைப்பற்றி எல்லாம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்காது.
இது தெரியாமல் உங்களை எமோஷனாலாக சீண்டலாம். உங்கள் நல்ல எண்ணம் புரியாமல் சிலர் உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் பிறந்து இருக்கும் 2024 ல் இதை மனதில் வைத்தே தீர்மானத்தில் ஒன்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.. அப்புறம் பாருங்க 2024 வேற லெவலில் இருக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications