2 பீஸ் உடையில் அமலா பால்.. பாறையின் மேலே ஏறி டைவ் அடித்து உற்சாக குளியல்
பாறையின் மேலே ஏறி டைவ் அடித்து, குளித்து கும்மாளம் போடும் வீடியோ ஒன்றை நடிகை அமலா பால் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை: 2 பீஸ் உடையில் பாறையின் மேலே ஏறி டைவ் அடித்து, குளித்து கும்மாளம் போடும் வீடியோ ஒன்றை நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியா சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பகிரப்படுகிறது.
சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனவர் அமலா பால். அந்த படம் சர்ச்சையான நிலையில், அடுத்ததாக வந்த மைனா படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அமலாபாலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக வந்த அமலா பால் யார் என்று எல்லோரும் தேடினார்கள். அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. முன்னணி நடிகையாக தமிழில் மாறினார்.
விக்ரம் உடன் தெய்வத்திருமகள், விஜய் உடன் தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் அமலபால் தான் ஹீரோயினாக இருந்தார். இதனிடையே தெய்வத்திருமகள் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அந்த சமயத்தில் புகழின் உச்சியில் இருந்த அமலபால் நடிப்பில் வெளியான பசங்க 2, அம்மா கணக்கு, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

விவாகரத்து
இதனிடையே இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம் மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு அமலாபால் ஏ.எல்.விஜய் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனிடையே திருமணத்திற்கு பின்பும் மீண்டும் நடிக்க வந்த அமலா , திருட்டு பயலே, ராட்சசன் ஆகிய படங்களில் நடித்தார். இருபடங்களுமே நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் 2019 இல் ஆடை என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் கவர்ச்சி அதிகமாக இருந்ததால் அதன்பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வெப் சீரியஸ்
இந்நிலையில் 2022 இல் டீச்சர் என்ற மலையாள படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால் தமிழில அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள 'அதோ அந்த பறவை போல என்ற படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது. அமலா பால் தற்போது வெப் சீரியஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மனஉளைச்சல்
நடிகை அமலா பால் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அண்மையில் நடிகை அமலா பால் தனக்கு நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக விழுப்புரம் போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார், அந்த விவகாரத்தில் மன உளைச்சலில் இருந்த அவர் அடிக்கடி ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வந்தார்,

டைவ் அடித்து மகிழ்ச்சி
இந்நிலையில் தற்போது இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஆசிரமத்திற்கு அமலா பால் சென்றிருக்கிறார். அங்கு தங்கி தியானம், வழிபாடு, யோகா ஆகியவற்றை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது. அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 பீஸ் உடையில் இருக்கும் அமலா பால், டைவ் அடித்து குளித்து கும்மாளம் போடுகிறார். பாறைகளில் ஏறுவதுடன், அங்கிருந்து டைவ் அடித்து குளித்து மகிழ்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பேர் விரும்பி லைக் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications