ரூ.10 லட்சம் கோடி இருந்தும்! சிக்கனமாக திருமணத்திற்கு செலவு செய்த அம்பானி! மிடில் கிளாஸுக்கு பாடம்
சென்னை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டில் நடக்கும் திருமணம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இந்த திருமணத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் கலாச்சாரப்படி திருமணம் என்பது வெறும் திருமணமல்ல. அது ஒரு வகையில் பொருளாதாரத்தை வெளிப்படுத்தும் பண்டிகை. பலரும் எங்களிடம் எவ்வளவு காசு இருக்கிறது என்று காட்டுவதற்காக கூட திருமணங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.

மிகப் பெரிய செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களைக் கூட திகைக்க வைக்கும் வகையில் இந்தியாவில் திருமணங்கள் பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். அந்த வகையில் உலகமே வியக்கும் விதமாக இந்தியா இன்னொரு பெரிய திருமணம் அம்பானி குடும்பத்தில் நடக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவை திருமணம் செய்து கொடுத்தார். இந்தியாவே கண்டிராத மிக விலையுயர்ந்த திருமணத்தை அவர் நடத்தி பலரையும் வியக்க வைத்தார்.
கிட்டத்தட்ட $100m (£80m) அதாவது 830 கோடி ரூபாய் செலவு செய்து அந்த திருமணத்தை நடத்தினார். இப்போது அதே முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.
நேற்றுதான் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கான திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஜாம்நகரில் உள்ள ஜோக்வாட் கிராமத்தில் நடந்தது. பிரம்மாண்ட விருந்துடன் இந்த விழா தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் குஜராத்தி பாரம்பரிய உணவை அங்கு உள்ள கிராம மக்களுக்கு வழங்கினர். சுமார் 51,000 உள்ளூர் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு பிரம்மாண்டமாக விழா கொண்டாடப்பட்டது.
இது போன்ற பல்வேறு விழாக்கள் அடுத்த சில நாட்களுக்கு தொடரும். ஆனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் பிப்ரவரி 28 முதல் 3 வரை ஜாம்நகரில் உள்ள அம்பானி எஸ்டேட்டில் 5 நாட்கள் நடைபெறும். முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
ராதிகா மெர்ச்சன்ட், என்கோர் ஹெல்த்கேர் என்ற பெரிய இந்திய மருந்து நிறுவனத்தை நடத்தும் ஒரு பிரபலமான வணிகக் குடும்பத்தின் வாரிசு ஆவார். தற்போது அந்த நிறுவனத்தின் தலைவராக ராதிகா மெர்ச்சன்ட் இருக்கிறார் .
1000 கோடி ரூபாய் செலவு: இந்த திருமணத்திற்காக மொத்தமாக 1000 கோடி ரூபாயை அம்பானி செலவு செய்கிறார். இது அவரின் சொத்து மதிப்பில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.
ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 112 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர் ஆற்றல் முதல் ஜவுளி மற்றும் தொலைத்தொடர்பு வரை பல துறைகளில் கோலோச்சி வருகிறார். கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி சொத்து கொண்ட முகேஷ் அம்பானி தன் வீட்டு திருமணத்திற்கு வெறும் 1000 கோடிதான் செலவு செய்கிறார்.
அதாவது வெறும் 1 சதவிகிதம் மட்டுமே செலவு செய்துள்ளார். இது இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய எடுத்துக்காட்டாக மாறி உள்ளது.
ஏனென்றால் இந்தியாவில்தான் வீட்டில் கடன் இருந்தாலும் மேலும் 10 - 15 லட்சம் கடன் வாங்கி திருமணம் செய்வது வழக்கம். பல மிடில் கிளாஸ்கள் கடனில் சிக்கவே இந்த ஆடம்பர திருமணங்கள்தான் காரணம். ஆனால் அம்பானி வீட்டு திருமணத்திலோ 10 லட்சம் கோடி இருந்தாலும் திருமணத்திற்கு வெறும் 1000 கோடிதான் செலவு செய்கிறார்.
1000 கோடி ரூபாய் அதிகமாக இருந்தாலும்.. அவர்கள் வீட்டு சொத்து மதிப்பிற்கு இது வெறும் 1 சதவிகிதம்தான். அந்த வகையில் திருமணத்திற்கு எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்கு அம்பானியே பெரிய எடுத்துக்காட்டாக மாறி உள்ளார்!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications