ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு? வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் சக்கரபாணி தந்த விளக்கம்
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்குப் பற்றாக்குறை எழுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும், ஆயில், மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு டைப் ரேன் அட்டைக்கும் குறிப்பிட்ட அளவு இவை வழங்கப்படும்.
இதனிடையே தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்குப் பற்றாக்குறை எழுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி: தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 15 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படுகிறது. இது குறித்து நாங்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல கோதுமையை நேரடியாக நாமே கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி தர வேண்டும். அப்படி அனுமதித்தால், நமது கோதுமை தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். 2021 திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் சுமார் 7500 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை இப்போது 2,712 கிலோ லிட்டராக குறைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தட்டுப்பாடு: மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்குமாறு நாங்கள் இரண்டு முறை கடிதம் எழுதிவிட்டோம். இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து உரியப் பதில் வரவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்கள் மண்ணெண்ணெய் வைத்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் மத்திய அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டுக்குக் குறைத்துள்ளது வேதனை தருகிறது. ஆனால், பொதுமக்களுக்கு ஏதோ தமிழக அரசு மண்ணெண்ணெய் வழங்குவதைக் குறைத்து விட்டதாகத் தோற்றம் ஏற்பட்டுள்ளது.7000 கிலோ லிட்டராக இருந்த ஒதுக்கீட்டை 2012 லிட்டராக குறைத்துள்ளனர். இப்போது நமக்கு 9 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கிறது. ஆனால், தேவைக்கு ஏற்ப மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கப்படுவதில்லை. இது குறித்து மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

அரிசி கொள்முதல்: திமுக அரசு பொறுப்பேற்ற போது, 376 நெல் அறவை ஆலைகளாக இருந்ததை 747 ஆலைகளாக உயர்த்தியுள்ளது. அங்கே இருக்கும் ஆலைகளுக்குத் தகுந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டு கருப்பு, பழுப்பு இல்லாத அரிசியைக் கொள்முதல் செய்கிறோம். குடோனுக்கு வரும் உரியச் சோதனை செய்யப்பட்டே அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. 2020 - 2021ஆம் ஆண்டில் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
2021- 2022இல் 43 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது வரை 35 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளோம். இந்தாண்டு ஆண்டு முடிவதற்குள் நிச்சயம் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும். அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications