"இந்தி எதிர்ப்பு, நீட் விலக்கு.." இதுதான் தமிழகம்! விளக்கமாக சொன்ன பிடிஆர்! கைதட்டி ரசித்த சசி தரூர்

தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் உரையாடல் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் உடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அமைச்சர் பிடிஆர் நீட் மற்றும் இந்தி திணிப்பு குறித்து விரிவாகப் பேசியிருந்தார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்த மாத தொடக்கத்தில் மாத்ருபூமி சர்வதேச திருவிழா 2023 என்ற பெயரில் இலக்கிய திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஆளுமைகளும் கலந்து கொண்டனர்.

அதன்படி தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் பிடிஆர், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் உடன் உரையாடினார். அதில் அமைச்சர் பிடிஆர் நீட் மற்றும் இந்தி திணிப்பு குறித்து விரிவாகப் பேசியிருந்தார்.

 சசி தரூர்

சசி தரூர்

அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் பேசும் சசி தரூர், "மற்ற மாநிலங்களில் எதிர்க்காத கூட்டாட்சி பிரச்சினைகளில் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது.. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால்.. மாநிலத்தில் இருக்கும் சில குழந்தைகள் இந்தி கற்றுக் கொள்வதால் என்ன ஆகப் போகிறது. அது தமிழ்நாட்டின் நலன்களை எப்படிப் பாதிக்கப் போகிறது..

கேள்வி

கேள்வி

அடுத்து நீட் தேர்வு விகாரம்.. தமிழ்நாட்டில் இருக்கும் குழந்தைகள் தமிழில் தேர்வு எழுத வேண்டும் என்று கேட்டால் ஓகே.. அது நிச்சயம் அவர்களைத் தமிழ்நாட்டின் மருத்துவ பயிற்சிக்கு மட்டும் பயன்படும்.. அதே சமயம் தேசியளவில் இருக்கும் நீட் தேர்வு அவர்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் படிக்கவும் வேலை செய்யவும் உதவும் அல்லவா.. இந்த இரண்டிற்கும் எப்படி பதில் சொல்கிறார்கள்" என்று கேட்டிருந்தார்.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

அதற்குப் பதிலளித்த அமைச்சர் பிடிஆர், "தமிழ்நாட்டில் இந்தி கட்டாயம் என்பதை யாராலும் ஏற்க முடியாது.. 80,90 ஆண்டுகளாக இதே பிரச்சினை இருக்கிறது. அத்தியாவசியமற்ற மொழிகள் என்று நாங்கள் கருதும் சில மொழிகளைக் கட்டாயப்படுத்தினால்.. அது சீக்கிரம் தமிழ் அல்லது ஆங்கிலத்தை முக்கியத்துவம் இல்லாத இடத்திற்கு மூன்றாம் தர நிலைக்குத் தள்ளிவிடும். எங்கள் அடையாளத்தின் அடிப்படையே தமிழ் மொழிதான். அண்ணா சொன்னது போல.. எனக்கு இருமொழி கொள்கை இருக்கிறது என்றால் முதல் மொழியாகத் தமிழ் இருக்கும். ஏனென்றால் அனைவரும் முதல் மொழியாக தங்கள் தாய்மொழியையே கற்க விரும்புவார்கள்.

 இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

அடுத்து ஆங்கிலம்.. ஏனென்றால் ஆங்கிலம் தான் மாநிலங்கள் கடந்து நாடு கடந்து தகவல் தொடர்புக்குப் பயன்படுகிறது.. ஆங்கிலம் தான் உம்மையில் நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஒரு மொழியாக இருக்கிறது. சர்வதேச நாடுகளுடன் போட்டிப்போடும் போது அது உதவுகிறது.. அப்படியிருக்கும் போது நான் ஏன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். நான் நாடாளுமன்ற குழுவிலும் இது தொடர்பாகப் பேசியிருந்தேன். நீங்கள் மும்மொழி கொள்கையை முன்மொழியும்போது.. உண்மையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால்.. இந்தி ஹார்ட் லேண்ட் பகுதியில் உள்ளவர்களால் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கூட கற்பிக்க முடியாது என்பதையே சொல்ல வருகிறீர்கள்.

 எனக்கு 3.. அவர்களுக்கு ஒன்றா

எனக்கு 3.. அவர்களுக்கு ஒன்றா

இது எப்படியென்றால் இந்தி ஹார்ட் லேண்ட் பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு மொழி.. இந்தி மட்டும் தெரிந்திருந்தால் போதும்.. ஆனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மூன்று மொழி கொள்கை பின்பற்ற வேண்டுமாம். முதல் மொழியாகத் தாய் மொழி, உலகெங்கும் உள்ளவர்களுடன் பேச ஆங்கிலம்... ஆங்கிலம் கற்க முடியாதவர்களிடம் பேச இந்தி.. நான் மட்டும் ஏன் 3 மொழிகளைக் கற்கத் தேவை.. அவர்களுக்கு ஒரு மொழி.. நமக்கு மூன்று மொழி என்று இருக்கிறது. இதைத் தான் நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கிறோம்.. ஒருவர் தானாக இந்தி கற்றுக் கொள்ள முன்வந்தால் ஓகே.. அதில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

 இந்தி ஹார்ட் லேண்ட்

இந்தி ஹார்ட் லேண்ட்

நான் மற்றொன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நமது நாட்டில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அவை மொழி வாரியாகவே பிரிக்கப்பட்டன. அப்படி மொழி வாரியாக பிரிக்கப்பட்டது என்றால்.. ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் அப்படிப் பிரிக்கப்பட்டது தானே.. அவை அனைத்தும் இந்தி ஹார்ட் லேண்ட் என்றால்.. அங்குப் பேசப்பட்ட மொழிகள் என்ன ஆகின. இந்தியை நீங்கள் திணித்தால் இது தான் நடக்கும். இதன் காரணமாக நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம்.

 நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட்டை பொறுத்தவரை.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு 1000 பேருக்கு அதிகப்படியான மருத்துவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000 பேருக்கும் 4 மருத்துவர்கள் உள்ளனர். அதிக மருத்துவக் கல்லூரிகள், அதிக எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் என அனைத்தும் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது அனைத்திலும் நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால்.. இந்த அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் மாநில நிதியில் இயங்குகிறது.. மற்ற பாடங்களைப் போல இல்லாமல்.. மருத்தும் என்பது பொது சுகாதாரத்துடன் தொடர்புடையது. உங்களால் இரண்டையும் பிரிக்கவே முடியாது. மருத்துவமனை இல்லாமல் மருத்து கல்லூரி நடத்த முடியாது.

மருத்துவம்

மருத்துவம்

மாநில அரசு பொதுச் சுகாதாரத்தை வழங்கும் போது.. மருத்துவக் கல்லூரிகள் எங்கள் எதிர்கால திட்டத்தைக் கருத்தில் கொண்டே இருக்கும்.. கிராமப்புறங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஒருவர் எந்தளவுக்குச் சேவை செய்கிறார்களோ.. அதன் அடிப்படையில் அவர்களுக்கு முதுகலை படிப்பில் கூடுதல் மார்க் கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல திட்டங்களை வடிவமைத்திருந்தோம். மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எங்கள் நிதியில் இயங்குகிறது. ஒரு ரூபாய் கூட மத்தியில் இருந்து வரவில்லை. மேலும், இவை மாநில பட்டியலில் இருக்கும் பொதுச் சுகாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்

நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்

அப்படியிருக்கும் போது எங்கள் குழந்தைகள் நாங்கள் நடத்தும் கல்லூரிகளில் சேர எந்த தேர்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்.. தமிழ்நாட்டை விட மத்திய அரசு மிகச் சிறந்த முடிவுகளைத் தந்திருந்தால் கூட அவர்களைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாமே என்று சொல்லலாம். அதையும் நாங்கள் செய்வோம். ஆனால், நாட்டிலேயே நாங்கள் முன்னிலையில் இருக்கும் போது, 5ஆம் இடத்தில் இருக்கும் மாணவர் ஏன் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+