'என்ன மிஸ்டர் மேனேஜர்?' இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க.. அண்ணாமலையை விளாசிய காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஃபைல்ஸ் பகுதி 2- 11 வருடங்கள் பழமையான ஃபைல்ஸ்.. அதிமுக ஃபைல்ஸ் கொடுப்பதாக சொன்னீர்கள் ஆனால், ஆனால் விசாரணைக்கு அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது திமுகவின் ஊழல் தொடர்பாக 2 வது பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அண்ணாமலை அன்று வெளியிட்ட பட்டியலில் திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம் பெற்று இருந்தது

What mr manager? DMK files part 2- 11 years old files, Gayatri Raghuram criticized Annamalai

இதனால் அதிர்ச்சி அடைந்த , திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணைக்கிணங்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூலை (14-ம் தேதி) அண்ணாமலை ஆஜரானார் . அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, " டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் 2014ஆம் ஆண்டு மு.க.அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். டி.ஆர்.பாலு எவ்வாறு ஊழல் செய்தார் எத்தனை கப்பல் வைத்துள்ளார் அதன் மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் எல்லாம் தெரியும் என்று அழகிரி கூறினார். அவர்மீது டி.ஆர்.பாலு எந்த வழக்கும் தொடரவில்லை. டி.ஆர்.பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள்.

திமுக ஃபைல்ஸ் பார்ட் 1 வெளியிட்டதால் திமுகவினர் பலர் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். அதில் இன்று டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.

அடுத்தகட்டமாக திமுக ஊழல் பட்டியல் சம்பந்தமான DMK Files பாகம் இரண்டு தயாராக உள்ளது. பாதயாத்திரைக்கு முன்பு DMK Files பாகம் 2 வெளியாகும். இதில் 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலமாக சொத்து குவித்த விவரங்கள் இடம்பெறுகின்றன. பினாமிகள் பெயர்களை பொது வெளியில் சொல்வதா அல்லது ஆளுநரிடம் தெரிவிப்பதா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியிருக்கக்கூடிய பட்டியலில் இருப்பவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் தங்கள் அனுமதியின்றி சிபிஐ வரக்கூடாது என்று தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. சிபிஐக்கு கொடுத்திருக்கக்கூடிய அந்தஸ்தை மாநில அரசு எடுத்துவிட்டது. இதனால் நாம் தப்பித்து விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.

திமுக பைல்ஸ் இரண்டாம் பாகம் குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் வழங்கலாமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அவர்களிடம் கொடுப்பதா அல்லது பொதுவெளியில் கொடுப்பதா என்று விரைவில் அறிவிப்பேன். DMK Files Part 2-வில் அதிமுகவில் இருந்து சென்ற திமுக அமைச்சர்கள் தான் அதிகம். பாதயாத்திரையின்போது dmk files பாகம்3, பாகம் 4 என அடுத்தடுத்து வெளியிடப்படும்" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு இன்று பதிலடி கொடுத்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், "திமுக ஃபைல்ஸ் பகுதி 2- 11 வருடங்கள் பழமையான ஃபைல்ஸ். அதிமுக ஃபைல்ஸ் கொடுப்பதாக சொன்னீர்கள் ஆனால், ஆனால் விசாரணைக்கு அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை.

என்ன மிஸ்டர் மேனேஜர்? யாரும் கவலைப்படவும் இல்லை, யாரும் பயப்படவும் இல்லை. தமிழகம் இன்னும் உங்களுக்கு எதிராக உள்ளது. மக்களை முட்டாள்கள் என்று நினைக்க வேண்டாம்." "இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் பிஜேபி ஃபைல்ஸ் மேலும் மேலும் ஃபைல்ஸ்?" என்று விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவருக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தியை பகிர்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+