தேடி வருது ரூ.1000.. மகளிர் உரிமை தொகை.. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு போன இன்ப அதிர்ச்சி மெசேஜ்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது.
திட்டம் அறிமுகம்: 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் 'மகளிர் உரிமைத் தொகை' என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது
விரிவாக்கம்: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது மேலும் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ. 1000 ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.
எப்படி இணைவது?: தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். வேறு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
இன்ப அதிர்ச்சி: இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது. 1.80 லட்சம் பேர் மேல்முறையீடு மற்றும் புது விண்ணப்பம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் 90 சதவிகிதம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டம் விளக்கம்: பொது அடிப்படை வருமானம் (Universal Basic Income) என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு சில பிரிவினரிடம் மட்டும் இத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச் செலவு செய்வதற்கும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும், சிறுசிறு தொழில்களைச் செய்ய முன் வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, பெண்கள் தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள். பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த மகத்தான முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெரும் பொருளாதாரப் பலன்களை உருவாக்கும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications