ஓபிஎஸ்-க்கு இன்னொரு சான்ஸ்? 3வது தீர்ப்புக்கு இபிஎஸ் காத்திருக்கனுமா? அதிமுகவில் பரபரப்பு

அதிமுக வழக்கில் 3வது தீர்ப்புக்கு இபிஎஸ்க்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்-க்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் தரப்பில் அதிமுக வழக்கு குறித்து வைத்திலிங்கம் கூறும் போது, பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் சிவில் கோர்டில் உள்ள வழக்கில் எங்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்றார். இதன் மூலம் 3வது தீர்ப்புக்கு இபிஎஸ்க்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்-க்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத போது, அவைத்தலைவர் வாயிலாக பொதுக்குழு கூடி முடிவெடுத்ததை தவறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சூழலில் முறையாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை என்று கருதி இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் களசூழலை ஆராய்ந்து சரியான தீர்ப்பையே சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவிற்கே எனும் போது, அதை கூட்ட தனி நீதிபதி தடை விதித்திருக்கக்கூடாது. அதிமுகவில் நிலவிய முட்டுக்கட்டையை போக்க தலைமைக் கழக நிர்வாகிகளின் வலியுறுத்தலின் பேரில் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த அவைத்தலைவரின் அறிவிப்பை தவறு என கூற முடியாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்முறையீடு தள்ளுபடி

மேல்முறையீடு தள்ளுபடி

ஜூலை 11 இல் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகளின் உத்தரவை உறுதிப்படுத்துவதாகவும், அந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு தள்ளுபடி

மேல்முறையீடு தள்ளுபடி

ஜூலை 11 இல் பொதுக்குழுவில் இயற்ப்பபட்ட தீர்மானங்களுககு எதிராக சட்டப்படி வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகளின் உத்தரவை உறுதிப்படுத்துவதாகவும், அந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து விளக்கம்

தீர்ப்பு குறித்து விளக்கம்

இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருந்தாலும், தங்களுக்கு இந்த தீர்ப்பு இன்னும் பாதகமாக இல்லை என்கிறது ஓ பன்னீர்செல்வம் தரப்பு. இது தொடர்பாக வைத்திலிங்கம் கூறும் போது, பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் சிவில் கோர்டில் உள்ள வழக்கில் எங்கள் தீர்ப்பு கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடருவோம். ஆனால் இது எங்களுக்கு பெரிய பாதிப்பு கிடையாது" என்றார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்போ அதில் தொடர்புள்ளிகளை வைத்து வருவதால் மீண்டும் தொடர்கிறது அதிமுக வழக்கு..

தன்னிச்சையாக முடிவா?

தன்னிச்சையாக முடிவா?

இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் கட்சி யாருக்கு என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். கட்சி யாருக்கு என்று தொண்டர்கள் முடிவு செய்வார்கள் எனறும் கூறினார். இதற்கிடையே தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று கூறி எடப்பாடி பழனிசாமி, தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து தான் முடிவெடுப்பேன் என்றார்.

காத்திருக்கனும்

காத்திருக்கனும்

தற்போதைய நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும், அதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. மாறாக தீர்மானங்களை எதிர்த்து சிவில் கோர்டில் வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் தீர்ப்புக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் வலுவான தலைவராக உயர்ந்துவிடுவார் என்றும்,. இந்த வழக்கால் அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+