Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன நான்சென்ஸ் இது? தெலுங்கர்கள்தான் பிரச்சனையா.. சீமானை விளாசிய திருமாவளவன்.. பளீர் அடி!

எனக்கு பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்பதை நான் நிறுத்த மாட்டேன் என்று திருமா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பாஜகவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்பி திருமாவளவன் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக சில நாட்களுக்கு முன் சீமான் பிரச்சாரம் செய்தார்.

மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் ஜாதி பற்றி பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.

 என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார். அவர்களை தூய்மை பணி செய்ய விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கன். அவர்கள் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு பேசும் தூய்மை பணியாளர்கள்தான் அருந்ததியர்கள் என்று சீமான் கூறினார். அவரின் இந்த பேச்சு காரணமாக ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அருந்ததியர்கள் போராட்டங்களை செய்து வந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் பாஜகவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமானை திருமாவளவன் எம்பி விமர்சனம் செய்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன் தனது பேச்சில், நான் நடத்துவது கருத்தியல் யுத்தம். இந்த கருத்தியல் யுத்தம் திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையிலான யுத்தம் கிடையாது. கம்யூனிஸ்டுகளுக்கும் பாஜகவிற்குமான யுத்தம் கிடையாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட உங்களால் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட உங்களால் கொடி ஏற்ற முடியாது. ஓட ஓட விரட்டுவோம். யாரிடம் வாலை ஆட்டுகிறாய். தமிழ்நாட்டில் உங்கள் வேலை பழிக்காது. பதவியை பார்த்து பல்லை இளிப்பவன் அல்ல திருமாவளவன். பதவியை துச்சமாக நினைப்பவன். என் தலையில் இருக்கும் முடியை விட மோசமாக பதவியை பற்றி நினைப்பவன் நான். சட்டமன்ற உறுப்பினர் ஆன இரண்டு ஆண்டுகளில் பதவியை தூக்கிவீசிவிட்டு வந்தவன் நான்.

 நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அண்ணன் தளபதி என்னை உதய சூரியன் சின்னத்தில் நிற்க சொன்னார். நீங்கள் தோல்வி அடைய கூடாது. ஜெயிக்க வேண்டும். அதனால் உதய சூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்று கூறினார். ஆனால் நான் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என் சின்னத்தில்தான் நிற்பேன் என்று கூறினேன். தனி சின்னத்தில் நிற்பேன் என்று சொன்னேன். பதவிக்கு ஆசைப்படுபவனாக இருந்தால் நான் உதய சூரியன் சின்னத்தில் நிற்கேன் அண்ணே என்று கூறிவிட்டு தலையை குனிந்தபடி வந்து இருப்பேன்.

எனக்கு கவலை இல்லை

எனக்கு கவலை இல்லை

ஆனால் நான் அப்படி செய்யவில்லை. I dont care.. எனக்கு பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்பதை நான் நிறுத்த மாட்டேன். அதை மட்டும் நான் விடவே மாட்டேன். உன்னை நான் கருத்தியல் ரீதியாக எதிர்ப்பேன். உன்னை அம்பலப்படுத்துவேன். பாஜகவை நான் எதிர்ப்பேன். என்னுடைய தில் யாருக்கு இருக்கிறது சொல்லுங்கள். இங்கே சிலர் மொழி அரசியல் பேசுகிறார்கள். சிலர் தெலுங்கர்களை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கன்னடர்களை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல் இது?

அரசியல் இது?

என்னய்யா அரசியல் இது? என்ன அரசியல் பண்றீங்க. வாட் நான்சென்ஸ். டெல்லியில் இந்தி பேசுறவன் இருக்கிறான். அவன்தான் தமிழ்நாட்டின் மீது அழுத்தம் கொடுக்கிறான். அங்கே இருக்கும் பிராமணன்தான் தமிழ்நாட்டிற்கு ஆபத்து. தமிழ் மொழிக்கு ஆபத்து. ஆனால் அருகே இருக்கும் தெலுங்கனும், கன்னடனும்தான் நமக்கு ஆபத்தா? என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க.. நான்சென்ஸ் என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். சீமான் பெயரை குறிப்பிடாமல் தெலுங்கர்கள் என்று விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+