அப்போ "அப்படி" சொன்னாரே.. திடீரென ட்விஸ்ட் வைத்த ஓ பன்னீர்செல்வம்.. ஜெ மரணம்.. இதுமட்டும் இடிக்குதே!
சென்னை: ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பான விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் இன்று அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வாக்குமூலத்தில் இடம்பெற்று இருக்கும் சில விஷயங்கள் சில சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
இடையில் இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடை இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் தொடக்கத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆஜர் ஆவதை தவிர்த்து வந்தார்.

ஆஜர் ஆனார்
இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் அவரை பார்த்தேன். அப்போது மெட்ரோ திறப்பு விழாவில் கலந்து கொண்டும். அதன்பின் ஊருக்கு வந்துவிட்டேன். அவரை செப்டம்பர் 22, 2016 அன்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் எதற்காக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் என்று தெரியவில்லை.

அப்போலோ
அதன்பின் அவரை நான் நேரில் பார்க்கவில்லை. ஜெயலலிதாவிற்கு உடலில் என்ன பிரச்சனை, நோய் இருந்தது என்று எனக்கு தெரியாது. அவருக்கு சர்க்கரை அதிகமாக இருந்தது மட்டும் எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டார். நேற்று 78 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ஓ பன்னீர்செல்வம் தெரியாது என்று பதில் அளித்தார். இந்த நிலையில் இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இன்று கடந்த 2 மணி நேரமாக ஓ.பி.எஸிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மெட்ரோ ரயில்
முன்னதாக மெட்ரோ ரயில் தொடக்க விழாவிற்கு பின் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று ஓபிஎஸ் கூறிய நிலையில், இன்று ஜெயலலிதாவை பார்த்ததாக ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று பார்க்கவில்லை என்று கூறிய ஓபிஎஸ், இன்று ஜெயலலிதாவை பார்த்ததாக கூறி ட்விஸ்ட் வைத்தார். நான் உட்பட 3 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அவரின் மரணத்திற்கு முன்பாக சந்தித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அவரை பார்த்ததாக ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது பார்த்தார்?
ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி நீக்கப்பட்ட முன்பாக அவரை நேரில் பார்த்தேன். திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஜெயலலிதா கையெழுத்து போட்டது உண்மைதான். அது எனக்கு தெரியும். அவர் என்னவெல்லாம் சாப்பிட்டார் என்று தெரியாது என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எங்களுக்கு சொன்னதாகவும், நேரில் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும் கூறினார்.

2 கேள்விகள்
ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று நேற்று ஓபிஎஸ் கூறிய நிலையில் இன்று பார்த்ததாக கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் எது உண்மை என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை ஓபிஎஸ் நேரில் சந்திக்காமல், கண்ணாடி வழியாக பார்த்ததை இப்படி கூறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் ஓபிஎஸ்ஸுடன் ஜெயலலிதாவை சந்தித்த அந்த இரண்டு அமைச்சர்கள் யாரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications