"130 சவரன் நகை.." நள்ளிரவில் கேட்ட மர்ம சத்தம்! களத்தில் இறங்கிய போலீஸ்.. கடைசியில் காமெடி ட்விஸ்ட்
சென்னையில் 130 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட் நடந்துள்ளது.
சென்னை: தலைநகர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஜோடி, 130 சவரன் நகை மாயமானதாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.. போலீசார் நடத்திய விசாரணை கடைசியில் பெரிய ட்விஸ்டில் முடிந்துள்ளது.
பதறிய காரியம் சிதறும் என்ற பழமொழி இருக்கிறது.. அதாவது எந்தவொரு செயலையும் நாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். சற்று பதறினாலும் கூட அந்தத் திட்டமே ஒட்டுமொத்தமாகக் குழம்பிவிடும்.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் ஐடி தம்பதி சிறு சம்பவத்தால் பதறியது மட்டுமின்றி போலீசாரையும் பயங்கரமாகக் குழம்பியுள்ளனர்.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன்.. இவர் தனது மனைவியுடன் எம்ஜிஆர் நகரில் வசித்து வருகிறார். சரவணன் சிறுசேரியில் இருக்கும் பிரபல ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.. அவரது மனைவியும் சிறுசேரியில் வேறு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்கள் சமீபத்தில் போலீசாரிடம் வந்து தங்கள் வீட்டில் இருந்த 130 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் அளித்தனர்.

130 சவரன் நகை
நள்ளிரவில் கொள்ளையர்கள் வந்து நகைகளைத் திருடிச் சென்றதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.. 130 சவரன் என்பதால் உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.. அசோக் நகர் உதவி ஆணையர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.. எம்.ஜி.ஆர் நகர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்குக் கைரேகை வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

பீரோ
போலீசார் வீடு முழுக்க தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பீரோ ஒன்றையும் அவர்கள் திறந்து சோதனை செய்த போது போலீசாரே குழம்பிவிட்டனர். ஏனென்றால் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட 130 சவரன் நகைகளும் பீரோவில் பத்திரமாக இருந்தது.. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.. ஐடி தம்பதியே தங்கள் நகைகள் கொள்ளை போனது போல நாடகமாடுகிறார்களோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணை
இதையடுத்து ஐடி தம்பதியிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு கோப்படுவதா, சிரிப்பதா என்றே தெரியாமல் போலீசாரே குழம்பிவிட்டனர். அதாவது எப்போதும் அவர் தனி ரூமிலும், அவரது மனைவியும் குழந்தைகளும் தனி ரூமிலும் தான் தூங்குவார்களாம். அன்றைய தினம் நள்ளிரவில் 12.30 மணியளவில் சமையலறையில் இருந்து பாத்திரங்கள் வரிசையாக விழுந்துள்ளது..

காமெடி
அப்போது அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை போல.. ஆனால் மறுநாள் காலையில் பீரோவும் திறந்து கிடந்துள்ளது. இதனால், நள்ளிரவில் திருடர்கள் தான் திருட வந்தார்கள் என்று நினைத்துவிட்டார்.. இந்த பதற்றத்திலேயே பீரோவையும் தேடியதால் அவரால் நகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.. நன்கு தேடாமல் பதறியடித்துக் கொண்டு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.. இதைக் கேட்டவுடன் போலீசாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அட்வைஸ்
போலீசார் தொடர்ந்து அந்த வீட்டை ஆய்வு செய்துள்ளனர்.. அங்கிருந்த எலி தொல்லை காரணமாகப் பத்திரங்கள் உருண்டு விழுந்துள்ளது. அதை இந்த ஐடி தம்பதி கொள்ளையர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.. காலையில் பீரோவும் திறந்திருக்க எல்லாமே குழப்பத்தில் முடிந்துள்ளது.. தேவையில்லாமல் பதறினால் இப்படித்தான் குழப்பம் ஏற்படும் என்றும் பொருட்கள் காணவில்லை என்றால் உடனே பதறாமல் நிதானமாகத் தேடும்படி போலீசார் அவருக்கு அறிவுறுத்திச் சென்றனர்.












Click it and Unblock the Notifications