Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைலி கூட மாத்த விடல! தகித்த ஜெயக்குமார் மனைவி.. முதல்வர் ஸ்டாலினின் "அந்த" ஆர்டர்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு பின் என்ன நடந்தது? முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின் உள்ள காரணம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Jayakumar மனைவி பேட்டி! வலுக்கட்டாயமா இழுத்துத்துட்டு போனாங்க | Oneindia Tamil

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியாக உள்ளன. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    சென்னையில் சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டிய நிலையில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேராக சென்று சோதனைகளை செய்தார்.

    தாக்குதல்

    தாக்குதல்

    அப்போது காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகி ஒருவரை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்கள் தாக்கினர். அந்த நபர் கள்ள ஓட்டு போட வந்த போது அவரை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் கூட வெளியே வந்தது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க காரணமே அந்த வீடியோதான். அதில் திமுக நிர்வாகி என்று கருதப்படும் அந்த நபரை ஜெயக்குமார் ஆட்கள் மேலாடை இன்றி அடித்து, அழைத்து வந்தனர்.

     ஜெயக்குமார் நடவடிக்கை

    ஜெயக்குமார் நடவடிக்கை

    ஜெயக்குமார் அருகே நிற்க அதிமுக நிர்வாகிகள் இப்படி செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. படங்களில் காட்டுவது போல மேலாடை இன்றி ஒருவரை தெருவில் இழுத்து வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஒருவேளை கள்ள ஓட்டு போட வந்தவராகவே இருந்தாலும் ஜெயக்குமார் இப்படி செய்திருக்க கூடாது என்று புகார்கள் வைக்கப்பட்டன. இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கைது

    கைது

    தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் இது தொடர்பாக புகார் அளித்தார். இதில் இன்று காலை ஜெயக்குமார் மீது வழக்கு பதியப்பட்டது. அவரோடு சேர்த்து மேலும் 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. தாக்குதல் நடத்துதல், கொலைவெறி தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து இரவு திடீரென சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் இல்லத்தில் 40க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கே அவரிடம் தீவிரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.

     அதிகரித்த டென்சன்

    அதிகரித்த டென்சன்

    இந்த நிலையில் இந்த கைதுக்கு பின் என்ன நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. ஜெயக்குமார் வீடியோ ஞாயிற்றுக்கிழமை மாலையே வெளியாகிவிட்டது. அப்போதே திமுக தரப்பில் இந்த வீடியோ கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஜெயக்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. திமுகவின் டாப் தலைவர்கள் சிலர் இது தொடர்பாக முதல்வர் தரப்பிடமும் பேசியதாக கூறப்படுகிறது. சென்னையில் திமுகவினர் மத்தியில் இது ஒரு வித டென்ஷனை ஏற்படுத்தி இருக்கிறது.

     தலைமைக்கு போன புகார்

    தலைமைக்கு போன புகார்

    முக்கியமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர்.. திமுக ஆட்சியில் திமுக நிர்வாகியையே இப்படி சட்டை இல்லாமல் அழைத்து செல்கிறார். இப்படி இருந்தால் நாம் ஆட்சியில் இருப்பதற்கு என்ன மரியாதை என்று சில திமுக டாப் தலைகள் கேட்டு இருக்கின்றன. இது தொடர்பான புகார்கள் முதல்வர் காதுக்கும் சென்று இருக்கிறது. நிர்வாகிகள் விரக்தியாக இருக்கிறார்கள்.. ஜெயக்குமார் செய்தது தவறு.. ஏதாவது செய்யவில்லை என்றால் நிர்வாகிகள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.. ஆக்சன் எடுப்பதே சரியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அறிக்கை

    அறிக்கை

    ஆனால் அவசரப்பட்டு கைது நடவடிக்கைளை செய்ய வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் போலீசார் தரப்பிடம் ஆலோசனை செய்து இருக்கிறார். இதில் அவசரப்பட்டு கைது செய்து, பின்னர் கோர்டில் கள்ள ஒட்டு புகார் பூமராங் ஆகிவிட கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில்.. கொதிப்பில் இருக்கும் திமுக நிர்வாகிகளை அசுவாசப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு மடல் ஒன்றும் எழுதினார். அதில் ஜெயக்குமார் சட்டத்தை தனது கையில் எடுத்துவிட்டார்.

     ஆனால் அறிக்கை போதாது

    ஆனால் அறிக்கை போதாது

    திமுக .நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். இதற்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். சட்டரீதியாக இதை நமது அரசு நிச்சயம் எதிர்கொள்ளும். அப்படி நடக்கும் போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போய்.. அவர்கள் எல்லோரும் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம் என்று கடுமையாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த கடிதம் மட்டும் பிரச்னையை சரி செய்யாது என்பதை உணர்ந்த முதல்வர் போலீசார் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பின்னர் எல்லாம் சரி என்றதும்.. கைதுக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கைது

    கைது

    இதையடுத்து ஜெயக்குமார் அவரின் வீட்டில் இருக்கும் போது உள்ளே புகுந்த போலீஸ் அவரை பிடித்து இழுத்து செல்ல முயன்று உள்ளனர். அதற்கு ஜெயக்குமார் என்னை தொடாதீங்க என்று கோபமாக பேசி இருக்கிறார். சரி தொடவில்லை.. எங்களிடம் எப்ஐஆர் உள்ளது முறைப்படிதான் கைது செய்கிறோம். உங்களை நாங்கள் தொடவில்லை. நீங்களே எங்களுடன் வாருங்கள் என்று கைது செய்து கூறி அழைத்து சென்றுள்ளனர். கைது சம்பவத்தை விவரித்த அவரின் மனைவி, கேஸ் எதுவும் இல்லை என்று இப்படி கைது செய்துள்ளனர். பழிவாங்கும் விதமாக இது உள்ளது.

     மனைவி புகார்

    மனைவி புகார்

    எங்களுக்கு பயமாக இருக்கிறது . என் கணவரை என்ன செய்ய போறாங்கனு தெரியல. அவரை மட்டும் தனியா கூட்டிட்டு போய் இருக்காங்க. அதுதான் பயமா இருக்கு. சாப்பிட்டுட்டு இருக்கோம். கதை உடைக்கும் அளவிற்கு தள்ளிக்கொண்டு வந்து கைது செய்தனர். ஒருத்தரை பிடிக்க எதுக்கு இத்தனை போலீஸ். அவரை நான் வருகிறேன். பேண்டை மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால் அதற்கும் கூட நேரம் கொடுக்கவில்லை.. கைலி மாற்ற கூட அவகாசம் கொடுக்கவில்லை.

    தொடாதீங்க

    தொடாதீங்க

    அவ்வளவு என் அவசரம் அவர்களுக்கு.. எனக்கு பயமாக இருக்கிறது என்று ஜெயக்குமார் மனைவி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் ஓட்டுனர் ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த கொளஞ்சி நாதன், ஸ்ரீதர், சுதாகர் ஆகிய 3 பேரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+