பொன்னையன் அப்படி சொல்ல.. "அஸ்திரத்தை" எடுத்த நயினார்.. மோதிக்கொள்ளும் அதிமுக - பாஜக.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே முக்கியமான சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறதாம்... அதிலும் வரும் நாட்களில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மோதல் பெரிதானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. அப்படி என்ன நடந்தது? ஏன் இந்த மோதல்? வாங்க பார்க்கலாம்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பு தற்போது ஐடி விங் 2.0 என்பதை உருவாக்கி வருகிறது. அதன் மாநில செயலாளர் டிஆர்பி ராஜா இதற்காக தீவிரமாக நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க பாஜகவும் தேசிய அளவில் இருந்து சில புள்ளிகளை தமிழ்நாடு கொண்டு வந்து ஐடி விங்கை பலப்படுத்தி உள்ளது.

ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஐடி விங் அவ்வளவு வலுவானதாக இல்லை. அதிமுக சார்பாக பெரிய அளவில் டிரெண்ட் செய்ய ஆட்கள் இல்லை.

அதிமுக மாநாடு

அதிமுக மாநாடு

இந்த நிலையில்தான் அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முன்னெடுப்பில் முக்கியமான கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டு செய்வது எப்படி, திமுகவிற்கு எதிரான புகார்களை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்வது எப்படி என்று இதில் நிர்வாகிகளுக்கு கிளாஸ் எடுக்கப்பட்டு இருக்கிறது.

பாஜக ஐடி விங்

பாஜக ஐடி விங்

முக்கியமாக திமுக ஐடி விங் 2.0 பற்றி இந்த அதிமுக கூட்டத்தில் விவாதித்து இருக்கிறார்கள். அதேபோல் பாஜக ஐடி விங் வாட்ஸ் ஆப்பில் செய்யும் பிரச்சாரங்கள், அனுப்பும் கார்டுகள், வீடியோக்கள் பற்றியும் இதில் ஆலோசனை செய்துள்ளனர். பாஜக வேகமாக தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக இதில் நிர்வாகிகள் சிலர் அப்செட்டாக பேசியதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சியாக நம் மீதுதான் போகஸ் இருக்க வேண்டும். ஆனால் பாஜகதான் லைம் லைட்டில் இருக்கிறது என்று அதிமுக நிர்வாகிகள் இதில் புலம்பி இருக்கிறார்களாம்.

பொன்னையன் என்ன சொன்னார்?

பொன்னையன் என்ன சொன்னார்?

இந்த நிலையில்தான் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் நேற்று கூட்டத்தில் பேசுகையில்.. தமிழ்நாட்டில் நாம்தான் எதிர்க்கட்சி. ஆனால் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்த பார்க்கிறது. அதை முறியடிக்க வேண்டும். இதற்கு ஐடி விங் இணையத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்போதுதான் பாஜகவை விட அதிமுக தனியாக எதிர்கட்சியாக தெரியும் என்று பொன்னையன் கூறி இருக்கிறாராம். ஆனால் அவர் அதிமுகவை பாஜக அழிக்க பார்க்கிறது என்று கூறியதாக சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வந்தது வேறு கதை.

அதிமுக தரப்பு என்ன சொல்கிறது?

அதிமுக தரப்பு என்ன சொல்கிறது?

இந்த நிலையில் பாஜக பற்றி இப்படி அதிமுக தலைகள் திடீரென பேச என்ன காரணம்.. எதுவும் மோதலா என்று ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் விசாரித்தோம். அதற்கு, பாஜக - அதிமுக மோதல் எதுவும் நேரடியாக இல்லை. ஆனால் பாஜக எங்களை மீறி தமிழ்நாட்டில் வளர பார்க்கிறது. நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி.. ஆனால் பாஜக தங்களை எதிர்க்கட்சி போல முன்னிறுத்துகிறது. அதுவும் கொங்கு போன்ற நாங்கள் வலுவாக இருக்கும் மண்டலத்தில் பாஜக வளர பார்க்கிறது. அதனால்தான் அவர்களின் உண்மையான பலத்தை தோலுரிக்க முடிவு செய்துள்ளோம்.. நாங்கள் இன்றி அவர்கள் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

 அண்ணாமலை மீது அப்செட்

அண்ணாமலை மீது அப்செட்

அதோடு அண்ணாமலை சமீப நாட்களாக வெளியிடும் சில அறிக்கைகள், பேட்டிகள் காரணமாக அதிமுக தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். அண்ணாமலைதான் எதோ எதிர்கட்சித் தலைவர் போல பேசுகிறார். அப்படி என்றால் நாங்கள் யார் என்று இபிஎஸ் தரப்பும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. நம்மிடம் ஒரு மாதிரி பேசுகிறார்.. வெளியேற வேறு மாதிரி பேசுகிறார் என்று அண்ணாமலை மீது சில அதிமுக தலைகள் அப்செட்டில் இருக்கிறார்களாம். ஜெயக்குமார் தொடங்கி இன்னும் பல மூத்த தலைகளும் இதே அப்செட்டில்தான் இருக்கிறார்களாம். சமீபத்தில் தமிழ்நாட்டில் 2 அமைச்சர்களை ஊழல் குறித்து வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி இருந்தார்.

2 ஊழல்கள்

2 ஊழல்கள்

இதை அதிமுக தரப்பும் "சில" காரணங்களுக்காக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு தமிழ்நாட்டில் 25 எம்பிக்களை பெறுவோம் என்று அண்ணாமலை கூறிய ஸ்டேட்மென்ட்டையும் அதிமுக ரசிக்கவில்லையாம். பாஜக எங்கே தங்களை மீறி வளர்ந்துவிடுமோ என்று அதிமுக தரப்பு கருதுகிறதாம். பல மாநிலங்களில் எதிர்கட்சிகளை அல்லது ஆளும் கட்சிகளை மீறி பாஜக வளர்ந்து இருக்கிறது. அதிலும் சில மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்பு ஆளும் கட்சியை விட பாஜக பெரிதாக வளர்ந்து இருக்கிறது.

பதிலடி சசிகலா அஸ்திரம்

பதிலடி சசிகலா அஸ்திரம்

அது போல தங்களுக்கு நடக்க கூடாது என்றுதான் அதிமுக இந்த பதில் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாம். இது இப்படி இருக்கத்தான் அதிமுகவிற்கு பதிலடி தரும் வகையில் சசிகலா அஸ்திரத்தை பாஜக எடுத்துள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பாஜகவிற்கு எதிராக அதிமுகவின் தற்போதைய தலைகள் காய் நகர்த்துவதை அறிந்து கொண்டுதான் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருக்கிறாராம்.

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

ஒருவேளை அதிமுக சேர்க்கவில்லை என்றால் பரவாயில்லை. பாஜகவில் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான வேலைகள் நடக்கிறது என்றும் நயினார் கூறியுள்ளார். அதாவது நீங்கள் எங்களுக்கு எதிராக செயல்பட தொடங்கினால் நாங்கள் சசிகலா அஸ்திரத்தை கையில் எடுப்போம் என்று அதிமுகவிற்கு பாஜக சொல்லாமல் சொல்வதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அதிமுக vs பாஜக

அதிமுக vs பாஜக

அதிமுக எங்களுடன் நட்பாக.. இப்போது இருப்பதை போலவே இருக்க வேண்டும். மாறாக பாஜகவிற்கு எதிராக ஏதாவது மூவ் செய்தால்.. சசிகலா அஸ்திரத்தை எடுக்கும் திட்டத்தில் பாஜக இருக்கிறதாம். அதற்கான டீசர்தான் இன்றைய நயினார் பேட்டி என்கிறார்கள். ஏற்கனவே நயினார் பேச்சால்தான் அதிமுக - பாஜக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறிந்தது. இந்த நிலையில் புதிய வெடியை நயினார் பற்ற வைத்து இருக்கிறார். இதனால்தான் வரும் நாட்களில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மோதல் பெரிதானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.. போக போக என்னென்ன நடக்கிறது என்று பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+