கண்ணை மூடிக்கிட்டு.. இதை தேர்வு பண்ணுங்க.. கொட்டும் பணம்.. வருமான வரியில் இதுதான் முக்கியம்
சென்னை: புதிய வருமான வரி முறையில் மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில் வருமான வரியில் பழைய முறை, புதிய முறையில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது.
பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும்.

பிஸ்னஸ் செய்து வருவாய் வாங்கும் மக்கள்.. ஒரே ஒரு முறை மட்டும் பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது நீங்கள் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறினால்.. அதன்பின் மாற முடியும்.
பழைய வருமான வரி முறையை பயன்படுத்தும் நபர்கள்.. அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பழைய முறைக்கும் மாற முடியும். ஆனால் புதிய முறையில் இருந்து பழைய முறைக்கு மாற ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
பட்ஜெட் மாற்றம்: பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ50,000-ல் இருந்து ரூ75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ15லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும்.
வருமான வரி: மேற்கண்ட வகையில் புதிய வருமான வரி முறையில் மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பழைய முறை அப்படியே தொடரும். பழைய வரி விதிப்பு முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கவனிக்க வேண்டிய விஷயம்: இப்போது புதிய முறையை தேர்வு செய்தவர்களுக்கு ஏழு லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை. புதிய அறிவிப்பை சேர்த்தால்.. அதாவது ஸ்டான்டர்ட் டிடக்ஷன் 75,000 என்று மாற்றப்பட்டதால் 7,75,000 வரை வருமான வரி இல்லை.
ஆனால் அதற்காக இந்த 7.75 லட்சத்திற்கு மேல் 1 ரூபாய் வருமானம் வந்தால் அதற்கு 20,010 ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இப்போது உள்ள வீதியில்.. 7.75 லட்சத்திற்கு கீழ் வருமானம் வந்தால் வரி கிடையாது.. அதே சமயம் 7.75 லட்சத்திற்கு மேல் வரும் வருமானம் 10% வரிசையை விட.. அதாவது 20,010 ரூபாய் வருமான வரியை விட குறைவாக இருந்தால்.. அந்த வருமானத்தையே வரியாக செலுத்தலாம்.
இதனால் 7.75 லட்சத்தோடு நீங்கள் கூடுதலாக 10 ஆயிரம் வருமானம் பெறுகிறீர்கள். நீங்கள் அந்த 10 ஆயிரத்தை வரியாக செலுத்தலாம். இதற்காக நீங்கள் 20,010 ரூபாய் வருமான வரியை செலுத்த வேண்டியது இல்லை. இந்த வரி முறையை புரிந்து கொண்டு உங்கள் பொருளாதார திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
எது சிறந்தது: இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.
முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய முறை; பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் எந்த முறை வேண்டும் என்று நீங்களே தீர்மானம் செய்து கொள்ளலாம்.
எனவே: இப்போது உள்ள முறைகள்படி உங்களுக்கு நிறைய முதலீடுகள் இருந்தால் பழைய முறையை தேர்வு செய்யலாம். முதலீடுகள் எதுவும் இல்லை, உங்கள் வருமானம் 7.5 லட்சத்திற்கு கீழ் என்றால் கண்ணை மூடிக்கொண்டு புதிய முறையை தேர்வு செய்யலாம்.












Click it and Unblock the Notifications