பார்க்க வரட்டுமா அம்மா? நன்றி மறக்காத விஜயசாந்தி.. சசிகலா சொன்ன "மெகா பிளான்".. பரபர பின்னணி!
சென்னை: சமீபத்தில் விஜய சாந்தியை சந்தித்த சசிகலா பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தஞ்சாவூர் மாணவி மரணத்தின் உண்மை பிண்ணனிகளை அறிந்து கொள்ள பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், நடிகை விஜயசாந்தியும் இடம் பெற்றிருந்தார். அந்த விசாரணைக் குழு தஞ்சை சென்று விசாரித்தது.
அதனையடுத்து சென்னைக்கு வந்தார் விஜயசாந்தி. ஆனால் சென்னைக்கு வருவதற்கு முன்பே, சசிகலாவை சந்திக்க விஜயசாந்தி நேரம் கேட்டு இருக்கிறார்.

சசிகலா
அதன்படி சசிகலாவை தொடர்பு கொண்டு, " உங்களை சந்திக்க வரட்டுமா அம்மா? " என கேட்டிருக்கிறார் விஜயசாந்தி. சசிகலாவும் வரச்சொல்லவே, சென்னை வந்தார் விஜயசாந்தி. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே சில பல பண உதவிகளை விஜயசாந்திக்கு செய்திருப்பவர் சசிகலா. அந்த நன்றியை எப்போதும் விஜயசாந்தி மறந்ததில்லை என்கிறார்கள்.

விஜயசாந்தி
சசிகலா- விஜயசாந்தி சந்திப்பில் அரசியல் இல்லை என அவர் சொன்னாலும் அரசியல் குறித்தே இருவரும் விவாதித்திருக்கிறார்கள் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அதிமுக தலைமை என்னிடம் வருவதற்கு பாஜக தலைவர்களிடம் நீங்கள் பேச வேண்டும். எடப்பாடியும் பன்னீரும் நம்பிக்கை துரோகிகள். இதனை பாஜக தலைவர்களுக்கு புரிய வையுங்கள் என்று சசிகலா விஜயசாந்தியிடம் கேட்டு இருக்கிறாராம்.

வலிமை
அதாவது விஜயசாந்தி மூலம் டெல்லி தலைமைக்கு தூது அனுப்பும் பிளான் பியை சசிகலா கையில் எடுத்து இருக்கிறாராம். முன்பு விஜயசாந்திக்கு செய்த உதவிகளுக்கு இப்போது கைமாறு கிடைக்கும் என்று சசிகலா நம்புகிறாராம். அதிமுக ஒற்றை தலைமைக்குள் வந்தால் தான் வலிமையாகும். அது என் தலைமையில் வரும்போது அதிமுக வலிமையாகும். அவர்களது பாஜக விசுவாசத்தில் உண்மை கிடையாது.

அதிமுக பாஜக
என்னை நம்பச் சொல்லி வலியுறுத்துங்கள். ஒரு காலத்தில் அதிமுகவும் காங்கிரஸும் தான் இயற்கையான கூட்டணி என சொல்வார்கள். அதேபோல அதிமுகவும் பாஜகவும் இயற்கையான கூட்டணி என்பதை என் தலைமையில் உருவாக்க முடியும். தேர்தல் காலங்களில் 60:40 என்ற விதத்தில் இடங்களை பகிர்ந்து கொள்ள என் தலைமையில் அதிமுக வந்தால்தான் பாஜகவின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று சசிகலா விஜயசாந்தியிடம் குறிப்பிட்டு இருக்கிறாராம்.
Recommended Video

கூட்டணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கேட்ட இடங்களை அதிமுக கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைமைக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக சசிகலா விஜயசாந்தியிடம் பேசி இருக்கிறாராம். இதையெல்லாம் பாஜக தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி அதிமுக என்னிடம் வருவதற்கு முயற்சி செய்யுங்கள் என விஜயசாந்தியிடம் கேட்டுக்கொண்டாராம் சசிகலா. அதற்கு, உங்களுக்காக அனைத்து சோர்ஸ்களையும் பயன்படுத்துவேன்.. நம்பிக்கையாக இருங்கள் என நம்பிக்கை கொடுத்துவிட்டு சென்றுள்ளாராம் விஜயசாந்தி.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications