ஸ்டன் ஆன தலைநகர்! மொத்தமாக முடங்கிய சென்னை.. எல்லா சேவைகளும் ரத்து.. முக்கியம் நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான சேவைகள், வசதிகள் எல்லாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது., இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த மிக்ஜாம் புயல் சென்னையை அப்படியே முடக்கி போட்டுள்ளது. புயல் காரணமாக என்னென்ன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.

What services are halted and stunned due to the cyclone Michaung in Chennai?

மின்சார தடை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டு உள்ளது. தரைக்கு கீழே மின் கம்பிகள் செல்லும் இடங்களில் மின் தடை இல்லை. அதே சமயம்.. மேலே மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் கனமழை காரணமாக மின் தடை செய்யப்பட்டு உள்ளது.

பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார இடங்களில் விடிய விடிய காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட்டு உள்ளது.

சுரங்க பாதைகள் மூடல்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இதுவரை 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

◾️ கணேசபுரம்
◾️ கொங்கு ரெட்டி
◾️ பெரம்பூர்
◾️ வில்லிவாக்கம்
◾️ ரங்கராஜபுரம்
◾️ அரங்கநாதன்
◾️ துரைசாமி ஆகிய முக்கிய சுரங்க பாதைகள் மூடப்பட்டு உள்ளன.

ரயில் மற்றும் பேருந்து சேவை; காலை 8 மணி வரை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் பேருந்துகள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

பாதுகாப்பு கருதி பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. புயலின் வேகம் குறைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ சேவை: செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி 4 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ந்து பம்பிங் செய்யப்பட்டாலும் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் தண்ணீர் புகுந்து உயர்ந்து வருகிறது. தற்போது பார்க்கிங் பகுதியில் 4 அடி நீர்மட்டம் உள்ளது. சில இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.

◾️ கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரோகினி தியேட்டர் பக்கத்திலிருந்து ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மூலம் ஸ்டேஷனை அணுகலாம்.

◾️ அரும்பாக்கம் ஸ்டேஷன் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை அணுகுவதில் சிறிது சிரமம் ஏற்படும்.

◾️ மற்ற நிலையங்களை அணுகலாம், தெரு மட்டத்தில் மட்டுமே சிறிய நீர் தேங்கி நிற்கிறது.

◾️ ரயில் சேவைகள் வழக்கமாக காலை 5 மணிக்கு தொடங்கும்.

பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். CMRL குழு தனது பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க கடுமையாக உழைத்து வருகிறது மற்றும் அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் அதன் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு ஆழ்ந்து வருந்துகிறது.

பள்ளிகள் விடுமுறை: அதேபோல் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+