சென்னையில் சினிமா பிரபலங்களே ஏமாறுகிறார்கள்.. வீடு லீஸ் அட்வான்ஸ் கொடுக்கும் போது செய்யக்கூடாத தவறு
சென்னை: ஒரு வீடு பார்த்துட்டீங்க.. உங்களுக்கு பிடிச்சிருச்சு.. லீஸ் அதாவது ஒத்திக்கு வாங்க போறீங்க அப்படீன்னா.. அட்வான்ஸ் கொடுக்க போவீங்க.. ஆனால் அட்வான்ஸ் கொடுக்கும் போதும் சரி, கொடுத்த பின்பும் சரி, சிலவிஷயங்களை முழுமையாக பேசி எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வாங்கி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பின்னாளில் சிக்கலில் சிக்கக்கூடும்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் வீட்டை லீஸ்க்கு பார்க்குறீங்க அப்படீன்னா, கண்டிப்பாக சில விஷயங்களை மிக கவனமாக பார்க்க வேண்டும். வீடு வாடகைக்கு பார்க்கிறீர்கள் என்றால், வீடு பிடிக்காவிட்டால் வீட்டை எளிதாக காலி செய்து கொண்டு போய்விடலாம். ஆனால் லீஸ் வீட்டில் அப்படி முடியாது. ஏனெனில் லீஸ் வீடுகளை பொறுத்தவரை, நீங்கள் வீடு சரியில்லை என உடனே வீடு மாறிவிட முடியாது. பணம் பெரிய தொகை என்பதால் உடனே வாங்கிவிடவும் முடியாது. வேறு யாராவது வந்தால் தான் தருவேன் என்று வீட்டின் உரிமையாளர் கூற அதிக வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வீடு சரியில்லாத சூழலில் வேறு வீடு பார்க்க முடியாமல், தவிக்கும் நிலை ஏற்படலாம்.

எனவே வீட்டை லீசுக்கு பார்க்கும் போதே, அவர் யார், அவருடைய சொத்துக்கள் எப்படி, வீடு கடனில் உள்ளதா, வீடு லீஸ் பணத்தை உடனே அவரால் தந்துவிட முடியுமா என்பதை தெரிந்து கொண்டு கொடுங்கள்.. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. சினிமா பிரபலங்களே இந்த விஷயத்தில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். வீடு யார் பெயரில் உள்ளதோ அவரிடம் நேரடியாக லீஸ் ஒப்பந்தம் போடுவது நல்லது. வீட்டின் உரிமையாளர் அதாவது மின்சாரம் யார் பெயரில் உள்ளதோ அவர் தான் வீட்டின் உரிமையாளர், அதை உறுதி செய்து அவரிடம் மட்டுமே ஒப்பந்தம் போட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி ஒப்பந்தம் போட்டுவிடாதீர்கள். பின்னாளில் ஏமாந்தால் பணத்தை வாங்கவே முடியாது.
அதேபோல் லீசுக்கு போகும் வீட்டை சுற்றி பார்க்கிறீர்கள். வீடு பிடித்துவிட்டது என்றால் வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் கேட்பார், அப்போது வீட்டின் உரிமையாளரிடம் அட்வான்ஸ் போடும் போதே, ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். அது என்னவென்றால் வீட்டில் உள்ள குறைகளை கண்டுபிடியுங்கள். வீட்டில் சவர் செயல்படுகிறதா, டைல்ஸ் பிரச்சனையா,கதவு, ஜன்னல், சுவர், மரசமான்கள், பைப் லைன், பெயிண்டிங் என வீட்டில் குறைகள் இருந்தால் எழுதிக்கொள்ளுங்கள். பாதி அட்வான்ஸ் கொடுக்கும்போதே, அதை ஒப்பந்தத்தில் எழுதி அவரிடம் முழு பணத்தை தரும் நாளுக்கு முன்பு குறைகளை சரி செய்ய தவறினால் வீட்டின் ஒப்பந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்துவிடுவேன் என்று எழுதி வாங்கி கொள்ளுங்கள். அதன்படி அவர் குறைகளை செய்து கொடுக்க அவர் ஒப்புக் கொண்டால் மட்டுமே அட்வான்ஸ் பணத்தை கொடுங்கள்.. இல்லாவிட்டால் பின்னாளில் குறைகளுடன் கூடிய வீட்டில் நீங்கள் குடியேற வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதேபோல் வீடு எந்த நிலையில் உள்ளதோ, அவ்வாரே இருக்க வேண்டும். வீட்டின் அமைப்பில் எந்த மாறுதலையும் ஏற்படுத்த கூடாது. அவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்றால் உரிமையாளர் சம்மதம் பெற்ற பின்னரே அதை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடுவது வீட்டின் உரிமையாளருக்கு நல்லது. வீட்டை காலி செய்யும்போது போதுமான மராமத்து வேலைகளை செய்து வீட்டை சரியான நிலையில் ஒப்படைக்க வேண்டியது வீட்டில் குடியிருப்பவரின் பொறுப்பு என்பதையும், மராமத்து வேலைகளுக்கு ஆகும் செலவை லீசுக்கு எடுப்பவர் செலுத்திய முன்பணத்தில் வாடகை விட்டவர் கழித்து கொள்ளலாம் என்பதை ஒப்பந்தத்திலேயே சொல்லிவிடுவது வீட்டு உரிமையாளர்களுக்கு நல்லது
அதேபோல் வீட்டில் இயற்கையான பிரச்சனைகளாக கதவில் பிரச்சனை ஏற்பட்டால், ஜன்னல் உடைந்தால், டைல்ஸ் உடைந்தால், பைப் உடைந்தால், வளாக பராமரிப்பு , மோட்டார் பராமரிப்பு போன்ற விஷயங்களை யார் மேற்கொள்வது என்பதை கவனமாக குறிப்பிட வேண்டும். வீட்டின் உரிமையாளர்கள் பொதுவாக குடியேறுவோரிடம் தான் இதை செய்ய சொல்வார்கள் எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
எவ்வளவு காலம் இந்த வாடகை (அ) குத்தகை ஒப்பந்தம்? முடியும்போது ஒப்பந்தம் தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலோ அல்லது பரஸ்பர விருப்பம் மூலம் நீடித்து கொள்வது பற்றியும், அல்லது ஒப்பந்தம் உள்ள கால கட்டத்திலேயே ஒப்பந்தத்தை முறிவு செய்ய வேண்டும் என்றால் இருவருக்கும் உள்ள உரிமைகள் என்ன? என்பன பற்றியும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.வீட்டிற்கான, மின்சார கட்டணம், குடிநீர், கழிவுநீர் வரி கட்டணம், லீசுக்கு விடப்படும் இடம் சொத்து வரி விதிப்பில் 'வணிக இடமாக' குறிப்பிடப்பட்டு அதற்குண்டான வரி விதிக்கும் பட்சத்தில் அதை யார் கட்டுவது போன்றவற்றையும் லீசுக்கு எடுப்பவரும், வீட்டின் உரிமையாளரும் தெளிவாக பேசி அதை ஒப்பந்தத்தில் குறிப்பிடுவது நல்லது. அதேபோல் லீஸ் ஒப்பந்தத்தை பதிவு செய்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்யும்போது மட்டுமே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியான தீர்வுகளை விரைந்து எடுக்க இருவராலும் முடியும்.
-
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு












Click it and Unblock the Notifications