நீச்சல் தெரியாதா! தண்ணீருக்குள் விழுந்தாலும் உயிர் பிழைப்பீர்கள்! எதை செய்யலாம்! எதை செய்யக் கூடாது?
சென்னை: நீச்சல் தெரியாதவர்கள் இடறி தண்ணீருக்குள் விழுந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஒரு நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் டிப்ஸ்களை தெரிவித்துள்ளார்.
நீச்சல் பயிற்சி என்பது உடலுக்கு நல்லதொரு உடற்பயிற்சியாகும். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அவரவர் ஒவ்வொரு விதமான பார்முலாவை கையாளுகிறார்கள். உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி என உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்கள்.

அந்தவகையில் நீச்சல் பயிற்சியும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும், குறித்த நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் நீச்சலின் போது இயங்குகிறது.
இதனால் ரத்த ஓட்டம் எல்லாவற்றுக்கு நல்ல மாதிரியாக பாயும். நீச்சல் தெரிந்தால் தண்ணீரில் தத்தளிப்போரையும் காப்பாற்ற உதவும். இது ஒரு புறமிருக்க, நீர் நிலைகளுக்கு செல்லும் போது தவறி விழுந்த பலர் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் சிலரை அவ்வழியாக செல்வோர் காப்பாற்றக் கூடும்.
நீச்சல் தெரியாதவர்கள் கவனத்திற்கு - Basic Survival Knowledge ! pic.twitter.com/3HN6RpIHdk
— Vignesh (@pc_vignesh) January 6, 2024
ஆனால் தம்மை காப்பாற்ற யாருமில்லாத சமயங்களில் என்ன செய்ய வேண்டும். இது குறித்து அஜித் நீச்சல் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: ஒரு வேளை நீங்கள் தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறீர்கள், உங்களை காப்பாற்ற யாரும் இல்லை.

அந்த சமயத்தில் உங்கள் உயிரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா, மூச்சை உள்ளிழுப்பது, மூச்சை சில வினாடிகள் பிடித்து நிறுத்தி வைப்பது செய்ய வேண்டும். மூச்சை 20 வினாடிகள் நிறுத்தி வைத்தால் போதும். தண்ணீர் உங்களை மேலே கொண்டு வரும். எந்த ஆக்ஷனும் செய்யாமல் இருக்க வேண்டும்,
கைகளை மேலே தூக்கினால் தண்ணீர் உங்களை உள்ளே இழுக்கும். மேலே வரும் போது மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள், உள்ளே போகும் போது மூச்சை விடாமல் பிடியுங்கள், அப்போது தண்ணீர் உங்களை மேலே கொண்டு வரும். அப்போது மூச்சை இழுங்கள். நெஞ்சு பகுதியில் காற்று இருந்தாலே தண்ணீர் உங்களை மேலே கொண்டு வரும் , உள்ளே தள்ளிவிடாது. எனவே நீச்சல் தெரியாதவர்கள் யாரும் இல்லாத போது இப்படி செய்யலாம் என அந்த நீச்சல் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications