கியாரே என்ன செட்டிங்கா? "வாழ்த்து" மட்டும் போதுமா? பவன் கல்யாணிடம் விஜய் கற்க வேண்டிய முக்கிய விஷயம்
சென்னை: வாழ்த்துக்களை மட்டும் தினம் தினம் சொல்லிக்கொண்டு இருக்கும் நடிகர் மற்றும் தமிழக வாழ்த்துக் கழக.. சாரி.. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் ரீதியாக பவன் கல்யாணிடம் இருந்து முக்கியமான சில விஷயங்களை கற்க வேண்டி இருக்கிறது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம்.. ஆந்திர பிரதேசத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு கைதானார். ஜெகன் மோகன் அரசு .. அரசியல் பாதாளத்தில் இருந்த நாயுடுவை கைது செய்து மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தார்.

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். அன்று இரவே பவன் கல்யாண் ஜன சேனா கட்சி நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு என்டிஆர் மாவட்டத்திற்கு சென்றார்.
சந்திர பாபு நாயுடுவை சந்திக்க 40க்கும் மேற்பட்ட கார்களில் பவன் கல்யாண் அதிரடியாக சென்றார். இரவோடு இரவாக பவன் கல்யாண் இப்படி சென்றது பெரிய புயலை ஏற்படுத்தியது. போலீஸ் பவனை தடுத்து நிறுத்தியதும்.. பவன் அப்படியே இறங்கி என்டிஆர் மாவட்டத்தில் நடக்க தொடங்கினார்.
விஜயவாடாவில் உள்ள மங்கள கிரி நோக்கி பவன் கல்யாண் வேகமாக நடக்க தொடங்கினார். ஒரு சூப்பர் ஸ்டார் ஹீரோ.. அரசியல் தலைவர்.. பவன் கல்யாண் இப்படி வேகவேகமாக நடந்து சென்றது அங்கே பெரிய அரசியல் ஸ்டேட்மென்ட் ஆக மாறியது.
அரசியல் ஸ்டேட்மென்ட்: அந்த இரவுதான் ஜெகன் மோகனின் அரசியல் வீழ்ச்சியாக மாறியது. பவன் கல்யாணின் அரசியல் எழுச்சியாகவும் மாறியது. எப்படி ஒரு எதிர்க்கட்சி தலைவரின் கைதுக்கு பவன் களமிறங்கி.. தைரியமாக முதல்வரை எதிர்த்தது பவனின் அரசியல் எழுச்சியாக பார்க்கப்பட்டது.
கியாரே என்ன செட்டிங்கா பாடலை வைத்து இப்போதும் பவனின் அந்த வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இப்போதும் கூட அதை வைத்து ரீல்ஸ் போடப்படுகிறது. அதுதான் இன்று பவன் கல்யானை ஆந்திராவின் துணை முதல்வராக, அமைச்சராக உயர்த்தி உள்ளது.
விஜய் கற்க வேண்டிய விஷயங்கள்: தமிழ்நாட்டிலும் பவன் கல்யாணின் அரசியல் ஸ்டைலை பின்பற்ற துடிக்கும் நடிகர் விஜய்.. வாழ்த்துக்களை மட்டும் தினம் தினம் சொல்லிக்கொண்டு இருக்கும் நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் ரீதியாக பவன் கல்யாணிடம் இருந்து முக்கியமான சில விஷயங்களை கற்க வேண்டி இருக்கிறது.
1. பண்டிகைகள், தேர்தல் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதை மட்டும் செய்யாமல் அரசியல் நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும்.
2. நாடே நீட் காரணமாக கொதித்து போய் விஜய் அதில் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்... இது போன்ற சமூக விஷயங்களில் விஜயின் நிலைப்பாடு என்ன?
3. விஜய் நேரடியாக முதல்வராக பார்க்கிறார் என்றால்.. அவரின் அரசியல் கொள்கைகள் என்ன? மத ரீதியான நிலைப்பாடு என்ன? சாதி அரசியலில் நிலைப்பாடு என்ன?
4. அதோடு விஜய் தைரியமாக கருத்துக்களை வைக்க வேண்டும். கண்டனம் என்ற வார்த்தை கூட இல்லாமல் விஜய் சிஏஏ விஷயத்தில் அறிக்கை வெளியிட்டது கிண்டல் செய்யப்பட்டது. அதன்பின் அவர் எதிலும் கருத்தே சொல்லவில்லை. நெல்லை சாதி அட்டாக் தொடங்கி இவிஎம் விவகாரம் வரை பல விஷயங்கள் இருந்தும் விஜய் தைரியமாக கருத்துக்களை சொல்லவில்லை.;
5. பவன் தைரியமாக அம்மாநில முதல்வரையே எதிர்த்தார்.. ஆனால் விஜய் வெறும் வாழ்த்துக்களை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
6. நேரடியாக ஒருவர் முதல்வர் ஆகவே முடியாது.. மக்களிடம் தன்னுடைய அரசியல் எது என்று சொல்ல வேண்டும். இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 2 வருடம் கூட இல்லாத நிலையில்.. விஜய் இப்போதே இதெல்லாம் பேசினால்தான்.. 2 சீட்டாவது சட்டசபையில் வாங்க முடியும்.
பவன் படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார். விஜய் படங்களை பவனும் ரீமேக் செய்துள்ளார். கொஞ்சம் அரசியலிலும் பவனை விஜய் ரீமேக் செய்தால் அவரின் தமிழக "வாழ்த்து" வெற்றி கழகத்திற்கு நன்றாக இருக்கும்!


Click it and Unblock the Notifications
