நடிகர் விஜய் கட்சிக்கு எந்த சின்னம் பொருத்தமாக இருக்கும்? என்னாது அந்த சிம்பளா? அய்யோ!
சென்னை: நடிகர் விஜய்யின் கட்சிக்கு எந்த சின்னம் பொருத்தமாக இருக்கும் என்பது குறித்து இப்போதே ரசிகர்கள் அலசத் தொடங்கிவிட்டனர்.
நடிகர் விஜய்! நீயெல்லாம் நடிக்க வந்துவிட்டாயா என கேட்டு அவரை அவமானப்படுத்தினார்கள். ஆனால் இன்றோ அவருடைய கால்ஷூட்டுக்காக எத்தனையோ தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்திருக்கிறார்கள்.

சினிமா துறையில் விஜய்க்கு எப்போதுமே நல்ல பெயர். அவருடன் நடித்தவர்கள் பெரும்பாலும் இதைத்தான் கூறுவார்கள். விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும் அவருக்கு நிறைய இளைஞர்களும் இளைஞிகளும் ரசிகர்களாக உள்ளனர். மற்ற நடிகர்களை போல் விஜய்யும் தன்னிடம் இருக்கும் இளைஞர் படையை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தற்போது அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ளார்.
அந்த கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம். விஜய் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது இலக்கு 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான். இன்னும் இரு ஆண்டுகளுக்குள் தனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையில் விஜய் ஈடுபடுவார் என தெரிகிறது.
ஒப்புக் கொண்ட படங்களுடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய்க்கு எந்த சின்னம் பொருத்தமாக இருக்கும் என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் விஜயின் கட்சிக்கு துப்பாக்கி சின்னம் என்றும் , லியோ படத்தில் நடித்ததால் சிங்கம் சின்னம் என்றும் மெர்சல் படத்தில் நடித்ததால் காளை சின்னம் என்றும் சுத்தியல், நங்கூரம் என கூறிவருகிறார்கள். இன்னும் சிலர் ஆள்காட்டி விரல் நீட்டி மணிக்கட்டு வரை உள்ள படத்தில் விஜய் கையை நீட்டி நடக்கும் சின்னம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
இப்படி ஆராய்ச்சிகளுக்கு மத்தியில் சிலர் எதுக்குப்பா அவசரம், தளபதியே அறிவிப்பார். அது வரை பொறுத்திருங்க என்கிறார்கள். மேலும் சுப்பிரமணியை சின்னமாக வைக்கவும் கோரிக்கைகள் எழுகின்றன. விஜய் கட்சி கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்குமா இல்லை முதலில் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி!












Click it and Unblock the Notifications